பக்கம்:கற்சுவர்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 - கற்சுவர்கள்

ன்த்களை நல்ல விதத்திலேயே எடுத்துக் கொண்டான். கடைசியாக அவன் அவளை அதிகம் சோதிக்க விரும்ப வில்லை. - -

"சரி! பார்க்கலாம்' என்று பொதுவாகச் சம்மதித்து வைத்தான், அவளும் அதை அவனுடைய சாதகமான பதிலாகவே புரிந்துகொண்டு அவனுக்கு நன்றி சொல்லி விட்டு ஆலயத்துக்குள்ளே தரிசனத்துக்குப் போய்ச் சேர்ந் தாள். , -

அவள் உள்ள்ே போன பின் குருக்கள்,

"இவ ரொம்ப நல்ல பொண்ணு! உங்கப்பாவோட பலவீனமான, வேளைகளிலேகூட அரை வற்புறுத்தியோ ஏமாற்றியோ பணம் பறிக்காத சின்ன ர்ாணி யாராவது இருக்க முடியும்னா அது இந்த அரண்மனையிலே இவ ஒருத்தி தான்' என்று மேலும் அதைத் தெளிவாக்கினார். த்னசேகரனுக்கு இப்போது அவள் மேல் முழுமையாக நம்பிக்கை ஏற்பட்டது. - . . . . . . . . . .

ஒரு நம்பிக்கை ஏற்பட்டாலொழிய தட்சிணாமூர்த்திக் குருக்கள் இவ்வளவு தூரம் புகழமாட்டார் என்பது அவனுக்கு மிக நன்றாகத் தெரியும். குருக்கள் சாதாரண மாக ஒருவரைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டா லொழியப் புகழ்ந்து சொல்ல மாட்டார் என்பது பல முன் அநுபவங்களால் நிரூபணம் ஆகியிருந்தது. -

இங்கு அவன் இவ்வாறு கோயில் முகப்பில் குருக் களோடு .ேசிக் கொண்டிருக்கும்போது அரண்மனையி விருந்து வில்லையணிந்த சேவகன் ஒருவன் கோவிலுக்கே" தேடிக்கொண்டு வந்து விட்டான். மரியாதையாக ஏழடி, விலகி நின்று தலைகுனிந்து உடம்பை-வளைத்து வண்ங்கிய ப்டி ஒரு கையால் வாய் புதைத்து வந்த விஷயத்தைத் தனிந்த குரலில் தனசேகரனிடம் தெரிவிக்கத் தொடங்கி ன்ான் அந்தச் சேவகன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/142&oldid=553114" இலிருந்து மீள்விக்கப்பட்டது