பக்கம்:கற்சுவர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கற்சுவர்கள்

இருந்துவிட்டான். சின்ன ராஜா அவருக்கேயுரிய சகஜமான சுபாவத்தின் காரணமாகவும் தந்தையின் மேலுள்ள, வெறுப்பின் காரணமாகவும் குடும்பக் கடன் விஷயமாகத் தன்னிடம் பேசினாலும் தான் அதைக் கேட்டுக் கொள் ளவோ அதில் கலந்துகொள்ளவோ கூடாது என்பதில் ஆவுடையப்பன் ஜாக்கிரதையாக இருந்தான். தன் நிலை மைக்குத் தன்னிடம் இதைப்பற்றி எல்லாம் அவர் பேசாமல் இருப்பதே உத்தமம் என்றுகூட அவனுக்குத் தோன்றியது.

"'என்ன ஆவுடையப்பன் பதில் சொல்ல மாட்டேங் கறே? நான் சொன்னது சரிதானே?"

தனசேகரனின் இந்தக் கேள்விக்குப் பதில் எதுவும் சொல்லாமல், "சின்னராஜா கோவிலுக்குப் போகணும்னு சொல்லியிருந்தா நானே கூட வந்திருப்பேனே?’ என்று மீண்டும் பழைய விஷயத்திற்கே வந்தான் ஆவுடையப்பன். அவனுடைய முன்னெச்சரிக்கையையும் தற்காப்பு உணர்வை யும் புரிந்து கொண்டு தனசேகரன் தனக்குள் தானே சிரித்துக் கொண்டான். ஆனால், 'இவனைப் போன்ற வர்கள் அளிக்கத் தயாராயிருக்கும் இந்த மரியாதைக்கும் கெளரவத்திற்கும் நாகரிகத்திற்கும் கூடத் தன் தந்தை தகுதியுள்ளவர்தானா என்ற சந்தேகம் தனசேகரனுக்கு ஏற்பட்டது. -

ஆவுடையப்பன் பின் தொடர அரண்மனையை நோக்கி நடந்தான் அவன். கோவில் அரண்மனை எல்லாமே. கோட்டைச் சுவர்களுக்கு நடுவே உள்கோட்டைப் பகுதியில் இருந்தாலும் சில நிமிஷங்கள் நடக்க வேண்டிய தொலைவி. விருந்தது.

உள்ளுர்ப் பொதுமக்கள் கோட்டைக்குள்ளே இருப்ப வற்றுக்கு உள் பட்டணம் என்றும் வெளியே இருப்ப வற்றுக்கு வெளிப் பட்டணம் என்றும் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டிருந்தார்கள். -

தனசேகரன் அரண்மனைக்குள்ளே போய்ச் சேர்ந்த, போது மாமாவும் காரியஸ்தரும் இளைய ராணிகள் சம்பந்த,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/144&oldid=553116" இலிருந்து மீள்விக்கப்பட்டது