பக்கம்:கற்சுவர்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

’星垒8 கற்சுவர்கள்

பார்த்தால் அவளைச் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டது. ஒரு விதத்தில் தன் தவறோ என்றுகூட அவனுக்கு இப்போது தோன்றியது. எப்படி எந்த விதத்தில், எங்கே அந்தச் சந்திப்பு நடக்க முடியும் என்று அவனும் தன்னால் ஆன வரை சிந்தித்துப் பார்த்தான்; ஒன்றுமே தோன்றவில்லை. பிற்பகலில் உள்பட்டணத்தில் கோவிலுக்கு அருகிலேயே உள்ள குருக்கள் வீட்டிற்குப்போய் 'இந்தச் சந்திப்பு சாத்தியமில்லை. தயவு செய்து மன்னியுங்கள்...' என்று அவரிடமே மறுத்துச் சொல்லவிடலாமா என்றுகூட நினைத்தான் அவன். -

பழைய சமஸ்தான முறைகள், சம்பிரதாயங்களின்படி நடப்பதானால் குருக்கள் வீட்டுக்கு அவன் தேடிப் போவ தைக்கூட அனுமதிக்க மாட்டார்கள். சொல்வியனுப் பினால் குருக்களே அரண்மனைக்குத் தேடி வந்து காத் திருந்து அவனைச் சந்திப்பார். ஆனால் அந்த முறைகளை அவன் அப்படி அனுசரிக்காவிட்டால் ஏனென்றும் எதற் கென்றும் தட்டிக் கேட்பவர்கள் இப்போது யாருமில்லை.

திவான்கள் வேலை பார்த்தவரை இந்த முறைகள் சம்பிரதாயங்களை எல்லாம் அவர்கள் அக்கறை எடுத்துக் கொண்டு வற்புறுத்தி வந்தார்கள். கடைசி நாட்களில் ராஜமான்யம் போன பின்னரும் தன் தந்தை இவற்றை எல்லாம் ஓர் அங்குலம்கூட விட்டுக் கொடுக்காமல் குறைத்துக் கொள்ளாமல் கடைப்பிடித்து வந்தார் என்பது தனசேகரனுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் தன்னை இந்த மாதிரிக் காரியங்களை எல்லாம் செய்யுமாறு காரியஸ்தரோ, மாமாவோ இந்த விநாடிவரை தூண்டவில்லை என்பதை அவன் நினைவு கூர்ந்தான். ஆனால் டிரைவர் ஆவுடை யப்பன் போன்றவர்கள் சுபாவத்தில் நல்லவர்களே ஆனா லும் இளையராஜா என்ற முறையில்தான் பழைய ஜபர்தஸ் துக்களை எல்லாம் கடைபிடிக்க வேண்டுமென்று எதிர்ப் பார்க்கிறார்கள் என்று அவனுக்குப் புரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/148&oldid=553120" இலிருந்து மீள்விக்கப்பட்டது