பக்கம்:கற்சுவர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி I 47

தன் குடும்பத்தினரைத் தவிர உட்கோட்டையில் குடி யிருந்தவர்களில் எல்லாராலும் மதிக்கப்படுகிற பிரமுகரான் தட்சிணாமூர்த்திக் குருக்களைத் தான் வீடு தேடிப் போய் பார்க்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. தன் தந்தை எதை எதை எல்லாம் சம்பிரதாயம் என்று முரண்டுடன் கடைப்பிடித்து வந்தாரோ அவற்றை எல்லாமே தன் . காலத்தில் உடைத்து விடவேண்டும் என்ற வெறி வேறு அப்போது அவனுள் மூண்டிருந்தது. யார் என்ன நினைத் தாலும் நினைத்துக் கொள்ளட்டும். தட்சிணாமூர்த்திக் குருக்கள் வீட்டுக்கு அன்று தான் போயே தீருவது என்ற முடிவுக்கு வந்தான் அவன்.

திட்டப்படி மாலையில் அவன் குருக்கள் வீட்டுக்குப் போய்த் தன் கருத்தைத் தெரிவித்தான். ஆனால் குருக்கள் அவன் சொல்லியதை அப்படியே ஏற்றுக் கொள்ள வில்லை. -

'சின்னராஜா என்ன நினைத்தாலும் சரி! இந்த அப்பாவிப் பெண்ணுக்கு வாக்கு கொடுத்ததை மறந்து டக் கூடாது; கொடுத்த வாக்கைக் காப்பாற்றணும்கிறதுதான் என்னோட விருப்பம். சின்னராஜாவுக்கு அம்மா மேலே இருக்கிற பிரியமும், மரியாதையும் எனக்கு நன்றாகத் தெரியும். உங்கம்மாவுக்கு அடுத்தபடி எந்தப் பெண்ணுக் காவது இந்த அரண்மனையிலே நீங்க மரியாதை செலுத்த முடியும்னா அது இந்தப் பெண்ணாகத்தான் இருக்க, முடியும். மத்த எல்லா இளைய ராணிகளும் உங்க அம்மா வுக்கு எதிராப் பெரியராஜாகிட்ட தூபம் போட்டுத் துாண்டி விட்டுக்கிட்டிருந்த காலத்திலேயே துணிஞ்சு உங்கம்மாவுக்கு ஆதரவாகவும், அநுசரணையாகவும் ராஜா கிட்டப் பேசிக்கிட்டிருந்த ஒரே இளையராணி இவதான். உங்கம்மாவைத் தன் மூத்த சகோதரியாக நினைத்து மரியாதை செலுத்தினவள் இவள். ராஜாகிட்ட எல்லோரும் பணம் பறிச்ச காலத்திலேயே பணத்தாசை இல்லாமே இருந்தவ இவ. இன்னிக்கும் அதே மாதிரிதான் இருக்கா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/149&oldid=553121" இலிருந்து மீள்விக்கப்பட்டது