பக்கம்:கற்சுவர்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 179

ததைப் போல் அவளுக்கும் ஒரு செக் கொடுத்தாகி விட்டது. காலி மனைக்குப் பத்திரமும் எழுதிக் கொடுத் தாகிவிட்டது. மற்றவர்களுக்குச் செய்யாத அதிகப்படி உதவியாக அவள் பையனின் படிப்புச் செலவுகளையும் தொடர்ந்து ஏற்பதற்கு இணங்கியாயிற்று. இவ்வளவுக்குப் பிறகும் தன்னைச் சந்தித்துப் பேச என்ன மீதமிருக்கும் என்று தனசேகரனுக்குப் புரியவில்லை. ஆனால் அவளைச் சந்திக்காமல் விட்டுவிடவும் துணிய முடியவில்லை.

மாமாவும் காரியஸ்தரும் வெளியே அனுப்பியது போக எஞ்சிய அரண்மனை அலுவலர்களும், பிறரும் சிலைகள், கலைப் பொருள்கள், அபூர்வப் பண்டங்கள் ஆகியவற்றுக்கு பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். அரண்மனை மியூலியம், நூல் நிலையம், ஏட்டுச் சுவடிகள், நவராத்திரி விழா அலங்கார ஊர்வலத்துக்கான வாகனங்கள், இவை எல்லாவற்றையும் பற்றி விரிவான பட்டியல் வேண்டும் என்று தனசேகரன் கேட்டிருந்தான். மாமா இந்த பட்டியல் அவற்றின் விற்பனைக்காக என்று நினைத்துக் கொண்டிருந் தார். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இப்படிப்பட்ட இந்தியப் பழம் பொருள்களுக்கு மதிப்பு மிகுதி; விலையும் அதிகம் என்று அவருக்குத் தெரியும். உதக மண்டலத் திலோ மூணாறிலோ, மைசூரருகே சிக்மகளூரிலோ பெரிய எஸ்டேட்டுகள் வாங்கிப் போடுவதற்குரிய பெருந்தொகை இவற்றை விற்பதன் மூலமாகக் கிடைக்கும் என்று முடிவு செய்துகொண்டு தமக்குத் தெரிந்த இரண்டொரு எஸ்டேட் புரோக்கர்களிடமும்கூட இரகசியமாகச் சொல்லி வைத்தி ருந்தார் மாமா. மலேயாவில் தாம் தோட்டத் தொழிலில் வளர்ந்து செழித்ததைப் போலத் தனசேகரன் தமிழ் நாட்டில் தோட்டத் தொழிலில் இறங்கி வளர்ந்து செழிக்க வேண்டும் என்று நினைத்தார் அவர். அதற்காக மேற் செலவு செய்ய வேண்டும் என்றாலும் அதைத் தன் கையி விருந்து செலவழிக்க அவர் தயாராக இருந்தார், தட்சிணா மூர்த்திக் குருக்களைத் தேடிச் சென்று கலியாணத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/181&oldid=553154" இலிருந்து மீள்விக்கப்பட்டது