பக்கம்:கற்சுவர்கள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 9.4 கற்சுவர்கள்

தனசேகரன் அதற்கு இசைந்தான். புதையல் காசுகள் -வைக்கப்பட்டு இருந்த குடத்தையும் மாதிரிக்கு ஒன்றிரண்டு தங்கக் காசுகளையும் கொடுத்தால் போதுமானது என்று தனசேகரன் இசைத்தது. அதிகாரிக்கு ஆச்சரியத்தை அளித்தது. வீண் முரண்டும். டாம்பீகமும், எதற்கும் விட்டுக் கொடுக்காத இயல்பும் உள்ள மன்னர் குடும்பங் களில் இப்படிச் சுபாவமான மனிதர்களும் இருக்கிறார்களே என்பதுதான் அதிகாரியினுடைய ஆச்சரியத்துக்குக் காரண மாயிருந்தது. . .

அரசாங்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி பீமநாத புரம் அரண்மனைக்கும், அரச குடும்பத்துக்கும் வாரிசு என்ற முறையில் தனசேகரன் புதையலின் மாதிரிகள் சிலவற்றை மியூவியத்தில் வைப்பதற்காகத் திருப்பித் தர வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிற மனு ஒன்றை எழுதிக் கொடுத்தான். - : . . . . .

மேலேயிருந்து உத்தரவு கிடைத்ததும் சில காசுகளை யும் பிறவற்றையும் உடனே திரும்பக் கிடைக்கச் செய்வ தாகக் கூறிவிட்டுப் புதையலை ஸ்பீல் செய்து எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள் அதிகாரிகள். , . . . . . . " -

புதையல் சம்மந்தமான அதிகாரிகள் அரண்மனைக்கு வந்து விட்டுத் திரும்பிப்போன மறுநாள் காலையில் யாரும் எதிர்பாராத விதமாகக் கோமளீஸ்வரன் சென்னையிலிருந்து புறப்பட்டு வந்து சேர்ந்தான். அவன் வந்த தினத்தன்று. மாமாவும், காரியஸ்தருமாகப் பரிமேய்ந்த நல்லூர்க் கோவிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும். புதிதாகச் செய்த ஒரிஜினல் தங்க நகைகளைச் சார்த்துவதற்காகப்புறப்பட்டுப் பேர்யிருந்தார்கள். அதிகாலை ஐந்து மணிக்கே காரில் இருவரும் பரிமேய்ந்த நல்லூருக்கு நல்லநேரம் பார்த்துப் பயணப்பட்டிருந்ததால் பீமநாதபுரம் அரண்மனையில் தன சேகரன் மட்டும்தான் இருந்தான். புதிய மியூவியத்தையும் அதன் இண்டிரியர்டெகரேஷன் ஏற்பாடுகளையும் அன்று பகலில் சுற்றிப் பார்ப்பதற்குத் திட்டமிட்டிருந்ததால் தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/196&oldid=553170" இலிருந்து மீள்விக்கப்பட்டது