பக்கம்:கற்சுவர்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 199

'தப்பா நினைக்காமே பின்னே எப்படி ஐயா நினைக் கிறது? எங்கம்மா மாதிரீன்னு சொல்வி எங்கம்மாவை நீர் அவமானப்படுத்தக் கூடாது. எங்கம்மா தெய்வம் ஐயா ! இப்படிக் கோலத்திலே எல்லாம் எங்கம்மா மட்டுமில்லே. உலகத்திலேயே எந்த அம்மாவும் தோன்ற மாட்டாங்க.’’

'கலை அம்சத்தை மட்டும் பார்த்தா எதுவும் தப்பாத் தெரியாதுங்க."

'ஒகோ! கலை அம்சத்தைப் பற்றி நீர் பாடம் சொல்லிக் கொடுத்துத்தான் நான் இனிமேல் தெரிஞ்சுக்கணு மாக்கும்.' .

'இல்லீங்க. ஜெயநளினி தங்கமான பொண்ணு. பெரியவரு மாதிரியே எப்பவும் போல நீங்களும் அங்கே வந்து போயிட்டிருக்கணும்னு ஆசைப்படுதுங்க. உங்க கிருபை வேணும்னு நினைக்குதுங்க."

கோமளிஸ்வரன் இதைச் சொல்லிய வீதம் மிகவும் கொச்சையாயிருந்தது. எப்போதோ எங்கோ மிகவும் அரட்டைக்காரனாக சம வயது இளைஞன் ஒருவனிடம் கேட்டிருந்த, 'அப்பன் வருவான் அதன்பின் மகன் வருவான், தப்பென்று கொள்ளாதே' என்ற பழம் பிரபந்தப் பாடல் வரிகள் இப்போது தனசேகரனுக்கு மீண்டும் நினைவு வந்தன. உடல் அருவருப்பு உணர்ச்சியால் சிலிர்த்து நடுங்கி ஒய்ந்தது. சினிமா உலகத்தின் பை-புராடெக்ட் ஆக விபசாரம் வளர்ந்து வருவது தனசேகரனுக்குப் புரிந்தது. விபசாரத்திற்காக தரகர்கள் எங்கும் திரிந்து கொண்டிருந் தார்கள். கொஞ்சம் கூட வெட்கமின்றி நாகரிகமான உரையாடலுடன் ஆடம்பரமான கார்களில் வந்து இறங்கி ஒரே பெண்ணைத் தந்தைக்கென்றும், மகனுக்கு என்றும் அடுத்தடுத்துப் பேரம் பேசுகிற தரகர்கள் நாட்டில் பெருகி விட்டது கண்டு தனசேகரனுக்கு வருத்தமாக இருந்தது.

கடைசியில், "சின்னராஜாவாப் பார்த்து ஏதாச்சும் போட்டுக் குடுத் தீங்கன்னாக் கேஸை வாபஸ் வாங்கச் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/201&oldid=553176" இலிருந்து மீள்விக்கப்பட்டது