பக்கம்:கற்சுவர்கள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 213

'அதெப்படி? கேஸ்னு வந்துட்டா அப்புறம் ரெண்டு பேருக்கும்தானே அது சிரமம்' - -

"அது தான் இல்லேன்னேன். யானை தன் தலை யிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கிற மாதிரி இப்போ இவங்க போட்டிருக்கிற கேளினாலே ஏற்கெனவே எங்கப்பா இவங்களுக்கு எழுதி வச்சிருக்கிற சொத்துக் களைக்கூட இனிமே நாங்களே திரும்பி வாங்கிக்க வழி பிறக்கப்போகுது. கேஸ் முடிஞ்சதும் விவரமா எல்லாம் நீங்களே தெரிஞ்சுக்குவீங்க' என்று தனசேகரன் பேசத் தொடங்கியபோது ஜெயநளினியின் முகத்தில் சற்றே கலவரக்குறி தோன்றியது. -

அடுத்த பகுதியில் சற்றே விலகினாற்போல நின்று கொண்டிருந்த கோமளிஸ்வரன் அப்போதுதான் உள்ளே தலையைக் காட்டினான். தானும், மாமாவும், ஜெயகுளினி யும் சினிமா விநியோகஸ்தர் சேதுராசன் சேர்வையும் மட்டும்தான் அங்கே இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்த தனசேகரனுக்கு இப்போதுதான் டைரக்டர் கோமளிஸ்வரனும் அங்கே நுழைந்து நின்று கொண்டிருக் கிறான் என்பது தெரிந்தது. அவர்கள் வாய்மொழியாகவே விஷயங்களை வரவழைப்பதற்காகத்தான் தனசேகரன் அப்படிப் பேசியிருந்தான். -

சேதுராசன் சேர்வை கொஞ்சம் அழுத்தமாக இருந்: தார். அவருக்குத் தனசேகரனின் பேச்சைக் கேட்டு உடனே கோபமோ ஆத்திரமோ எதுவும் வந்துவிடவில்லை. கோமளிஸ்வரன் ஒரேயடியாகத் துள்ளினான். - - "நளினிக்கு அந்த அடையாறு வீட்டை அவரே பிரியப் உட்டு வாங்கிக் குடுத்தாரு. இப்போ அரண்மனைச் சொத்திலே பாகம் குடுன்னு அவ கேட்டா அதுக்காக அடையாறு வீட்டை காட்டிப் பயமுறுத்தறது. நியாய தமில்லே!'

க-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/215&oldid=553191" இலிருந்து மீள்விக்கப்பட்டது