பக்கம்:கற்சுவர்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗薰4 கற்சுவர்கள்

'அடையாறு வீடு ஒண்னும் ஆகாசத்திலே இருந்து குதிச்சிடலே. அதுவும் பீமநாதபுரம் அரண்மனைச் சொத்தை வித்து வாங்கினதுதான், ஞாபகம் இருக்கட்டும். கேஸ்’னு வந்தாச்சுன்னா அப்புறம் எல்லாத்தையும் சந்தி யிலே இழுத்துத்தான் தீரனும்.”

தனசேகரன் இவ்வாறு கூறி முடித்ததும், ஒழுங்கா முன்றயாக் கேஸை வாபஸ் வாங்கிட்டா ஏற்கெனவே நீங்க ராஜா மூலமாச் சேர்த்து வச்சுக்கிட்டிருக்கிற சொத்தாவது மிஞ்சும். இல்லாட்டா அதுக்கும் ஆபத்துதான் என்று மாமாவும் உரையாடலில் சேர்ந்து கொண்டார்.

இப்போது சேதுராசன் சேர்வை தம்முடைய மெளனத் தைக் கலைத்துவிட்டுத் தாமே மெல்லப் பேசத் தொடங்கி னார். - -

"நான் ஒருத்தன் நடுவிலே மத்தியஸ்தன் இருக் கிறேன்னு நினைக்காமே நீங்களாகவே பேசிக்கிட்டா எப்படி? எல்லா விஷயமும் தெரிஞ்சவன் தான். சொல்லப் போனால் பெரிய ராஜாவுக்கும், நளினிக்கும் சம்பந்தம் ஏற். படறத்துக்குக் காரணமா இருந்தவனே நான்தான். இதினே. என்னைக் கலந்துக்காமல் ராஜாவும் ஒண்ணும் பண்ணின தில்லே. நளினியும் ஒண்ணும் பண்ணினதில்லே. நான் உங்க ரெண்டு பேருக்குமே நியாயமா இப்போ ஒருவழி சொல்ல முடியும்னு நினைக்கிறேன். வக்கீலுங்களுக்கும் கோர்ட்டுக்கும், கேசுக்கும் கொட்டி அழறதுனாலே பணம் தான் வீணா விரயமாகும். உறவுக்குள்ளே நம்ம 'மனுஷாளுக்குள்ளே அதெல்லாம் வேண்டாம்! தாமே

பார்த்துப் பேசி முடிவுபண்ணிக்கலாம்: - -

உறவாவது ஒண்ணாவது? யாருக்கும் உறவு ஒண்ணும் கிடையாது. சும்மா அதைச் சொல்லிப் பயமுறுத்தாதீங்க . என்று தனசேகரன் குறுக்கிட்டுச் சொன்னான். -

இதைக் கேட்டுச் சேதுராசன் சேர்வையின் முகத்தில். சுமுகபாவம் மாறியது. தனசேகரனைச் சற்றே உறுத்துப் பார்த்தார் அவர். r

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/216&oldid=553192" இலிருந்து மீள்விக்கப்பட்டது