பக்கம்:கற்சுவர்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 215

"உறவு இருக்கிறதும் இல்லாததும் உங்களுக்கு எப்படித் தெரியும் தம்பி? அதுக்கெல்லாம் கண்கண்ட சாட்சியா

நான் ஒருத்தன் இருக்கேனே?"

"'உங்களுக்கு இந்த மாதிரி வேலை எல்லாம் கூட உண்டுன்னு இப்பத்தானே தெரியுது?" - "இந்தா தனசேகரன் போதும்! நிறுத்திக்கோ. இவ ரோட நமக்கு வீண் பேச்சு வேண்டியதில்லே. பார்க்க வேண்டியதைக் கோர்ட்டிலே பார்த்துக்கலாம்' என்று நடுவே புகுந்து கண்டிப்பான குரலில் சொன்னார் மாமா. நிலைமை கடுமையாகியது. - கடைசியில் சேதுராசன் சேர்வையும் மற்றவர்களும் இறங்கி வழிக்கு வந்தார்கள். பலமணி நேரப் பேச்சுக்கும், வாக்குவாதத்துக்குப் பின்னால் ஜெயநளினி கேஸை உடனே கோர்ட்டிலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்வதென்றும் ஏற்கெனவே மகாராஜா அவளுக்குக் கொடுத்து அவள் வசமிருக்கும் பங்களா, நகைகள், எதையும் அவளே தொடர்ந்து வைத்துக் கொள்வதென்றும் புதிதாக மேற் கொண்டு எதையும் கேட்கக் கூடாதென்றும் சமரச முடிவு, ஆயிற்று. - -

கோமளிஸ்வரனுக்கு ஏமாற்றந்தான். ஆனால் முரண்டு பிடித்தால் இருக்கிற சொத்தும் போய்விடுமோ என்று பயந்துதான் அவன் அதற்கு ஒப்புக்கொண்டாக வேண்டி, யிருந்தது. - . . மாமாவும் தனசேகரனும் எதற்கும் மயங்கக்கூடியவர். களாக இல்லை. பச்சையாக வாய்விட்டுச் சொல்லாதது தான் குறையே ஒழிய அப்போது சேதுராசன் சேர்வை, மாமா தங்கபாண்டியனை ஜெயநளினியிடம் வகையாக' மாட்டி வைத்துவிட ஆன மட்டும் முயன்று பார்த்தார். அதில் அவருக்கு நாணமோ கூச்சமோ தயக்கமோ சிறிதும் இருக்கவில்லை. * - . பெரிய ராஜாவின் காமக் கிழத்தியாக இருந்த ஒருவரை அவருடைய மைத்துனனாகிய மாமாவிடமே காமக்கிழத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/217&oldid=553193" இலிருந்து மீள்விக்கப்பட்டது