பக்கம்:கற்சுவர்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 கற்சுவர்கள்

யாகச் சிபாரிசு செய்து பார்க்கவும் சேதுராசன் சேர்வை: தயங்கவில்லை. மாமாவும் தனசேகரனும் விழிப்புள்ளவர் களாக இருந்ததனால்தான் தப்ப முடிந்தது. கேஸ் போட்டு மிரட்டியோ இழுத்தடித்தோ பணம் பறிக்க இவர்கள் ஒன்றும் இளித்தவாயர்கள் அல்ல என்பது ஜெய நளினிக்கும் புரிந்து விட்டது. கோமளிஸ்வரன் சேதுராசன் சேர்வை ஆகியோருக்கும் புரிந்துவிட்டது.

அந்தக் கேஸ் வாபஸ் வாங்கப்பட்டு அதிகாரபூர்வமாக - அறிவிக்கப்படுகிறவரை மாமாவும் தனசேகரனும் சென்னை யில் தங்கினார்கள். வக்கீலை மத்தியஸ்தம் வைத்து ஜெய. நளினியிடம் ஒர் உடன்படிக்கை போல எழுதி வாங்கி னார்கள்.

காலஞ்சென்ற மகாராஜா பீமநாத ராஜசேர பூபதி யின் குடும்பச் சொத்துக்களில் இனி தனக்கு எந்த பாத்தி யதையும் இல்லையென்றும் தன்னோடு அவர் நெருங்கிப் பழகிய வகையில் தனக்குக் கட்டிக் கொடுத்த வீடுவாசல் நகை நட்டுக்களைக் கொண்டே தான் திருப்தியடைவதாக வும்" அவள் கைப்பட எழுதிச் சாட்சிக் கையெழுத்துடன் வாங்கி வைத்துக்கொண்டான் தனசேகரன்.

ஒரு பிரச்னை முடிந்தது மாமா! இனிமே பீமநாத புரத்திலே நம்ம மியூவியத் திறப்புவிழாவுக்கு ஏற்பாடு செய்யனும். அதற்கு ஏற்பாடு செய்யாமே மெட்ராஸ் லேருந்து திரும்பக்கூடாது." - - * .

உடனே மாமா, "சரி, யாராவது மந்திரியைக் கூப்பிட லாம்' என்றார். தனசேகரன் அவர் சொன்னதற்குச் சம்மதிக்கவில்லை.

"பேருக்கு ஒரு தல்ல குணவானான மந்திரியைக் கூப் பிடலாம். ஆனால் ஒரு சிறந்த புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர் இங்கே இருக்கிறார். அவரையும் கூப்பிடப்போ றேன்' என்றான் தனசேகரன். -

'நீ அந்த வேலையைக் கவனி. நான் கல்யாணப் பத்திரிகை வேலையைக் கவனிக்கிறேன். கேபிள் கொடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/218&oldid=553194" இலிருந்து மீள்விக்கப்பட்டது