பக்கம்:கற்சுவர்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露感的 கற்சுவர்கள்

புரம் மியூசியத் திறப்பன்று எல்லாப் பெரிய ஆங்கிலத் தினசரிகளிலும் தமிழ்த் தினசரிகளிலும் சிறப்பு அனுபந் தங்கள் வெளியிட ஏற்பாடு செய்தான் தனசேகரன். ஓர் அரண்மனை மியூசியமாக மாறுகிறது" என்பதுதான் அனு பந்தத்தின் தலைப்பாக இருந்தது. மியூசியத்தின் சிறப் புக்கள் அநுபந்தத்திலே விவரிக்கப்பட்டிருந்தன. படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. × × .

2O

பீமநாதபுரத்தின் அரச வரலாறு முடிந்து கலாசாரப் பெருமை என்ற வரலாறு மட்டும் புதிதாகத் தொடங்கி யிருந்தது. புகழும்-பழியும் நிறைந்த பழைய சகாப்தம் முடிந்திருந்தன. தனசேகரன் தன்னுடைய பெருந்தன்மை யாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையாலும் புதிய சகாப்தத்தைத் தொடங்கி இருந்தான். பீமநாதபுரம் அரண்மனையும், அதன் ஆட்சியும், சொத்துச் சுகங்களின் நிர்வாகமும் தந்தையின் காலத்தில் தாறுமாறாகவும், ஊழல் மயமாகவும் மாறி இருந்தாலும் சீரழிந்திருந்தாலும் தனசேகரன் பழைய தவறுகளை எல்லாம் ஒழுங்கு செய் திருந்தான். இன்ஷஅரன்ஸ் பணமும் வேறு சில வரவுகளும் ஊழலைச் சரி செய்ய உதவியிருந்தன.

தந்தை ராஜமான்யத்தையும், சொத்துச் சுகங்களையும் து றப்பதற்கே அஞ்சி, தயங்கி மேலும் மேலும் பல தவறு களை செய்தார். தனசேகரனோ அவற்றை எல்லாம் துறந்து சொத்துச் சுகங்களைத் தாராளமாக விட்டுக்கொடுத்து இப்போது மக்களிடத்தில் நல்ல பெயர் எடுத்திருந்தான்.

பழைய காலமுதல் அரண்மனை அந்தப்புரத்தில் இளைய ராணிகள் என்ற பெயரில் சேர்ந்துவிட்ட தண்டச்சோற்றுக் கூட்டத்தை யாராலும் கலைத்து அனுப்ப முடியாதென்று தான் எல்லாரும் நினைத்திருந்தார்கள். தனசேகரன் அதையும் செய்து முடித்திருந்தான். யாருக்கும் எந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/222&oldid=553198" இலிருந்து மீள்விக்கப்பட்டது