பக்கம்:கற்சுவர்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 227

இதயத்தின் பெருந்தன்மையையும் சேர்த்தே எடுத்துக் காட்டுகிறது. தனக்கு உரிமையான இந்த அழகிய அரண், மனையையும் கலைப்பொருட்களையும் ஊருக்கு உரிமை யாக்கியிருக்கிறார் திருவாளர் தனசேகரன். அவருடைய மனைவியாகும் இந்த இளம் பெண்ணுக்கு நான் ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் கணவர் உங்களுக்கு அரச குடும்பத்துச் சொத்துக்கள் எதையும் கொண்டு வரவில்லை. ஆனால் தன்னையே ஒர் அரும் பெரும் ஐசுவரியமாக உங்களுக்குக் கொண்டு வந்து தரப் போகிறார். இந்த பீமநாதபுரத்தின் வரலாற்றில் கிடைத்த மிகப்பெரிய செல்வம் அல்லது சொத்து நம் நண்பர் தன சேகரன்தான் என்பதை உங்களுக்குப் பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பொருட்காட்சித் திறப்பு விழாவில் அமைச்சர் பலத்த கரகோஷத்துக் கிடையே பேசினார்.

திருவிழாக் கூட்டம்போல மியூசியத்தைப் பார்ப்ப தற்குக் கூட்டம் சேர்ந்திருந்தது. மைல் நீளத்திற்கு மேல் நீளமாக உள்ளே நுழைய கியூ நின்றது. பெண்கள் கல்லூரித் திறப்பு விழாவும் அணைக்கட்டுத் திறப்பு விழா வும் அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்தன. திருமணத்திற் காக வந்திருந்தவர்கள் அனைவரும் இந்த விழாக்களுக்கும் வந்திருந்தனர். திருமணம் பரிமேய்ந்த நல்லூர்க் கோவிலில் எளிமையாக நிகழ இருந்தது. தனசேகரன் எப்படி விரும்பி னாலும் பெரிய ரப்பர் எஸ்டேட் உரிமையாளரான மாமா அதை அத்தனை எளிமையாக நடத்தச் சம்மதித்திருக்கக் கூடாது என்றார்கள் அவரது வியாபார நண்பர்கள். கோலாலம்பூரில் மெர்லின் ஹோட்டலில் ஒரு பெரிய வர வேற்புக்கும் விருந்துக்கும் ஏற்பாடு செய்துவிடலாம் என்றார் மாமா தங்கபாண்டியன் பரிமேய்ந்த நல்லூரில் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் தங்கு வதற்கு இடம், வசதிகள் எதுவும் இல்லை. பலர் பீமநாத புரத்தில் தங்கித் திருமண நாளன்று விடிந்ததும் காரில் பரிமேய்ந்த நல்லூருக்குச் சென்றார்கள். சிலர் ஆவிதானிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/229&oldid=553206" இலிருந்து மீள்விக்கப்பட்டது