பக்கம்:கற்சுவர்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 கற்சுவர்கள்

கவர்ந்திருந்தது. ஒரு சமஸ்தானம் மக்கள் உடைமை ஆகிறது' என்றும் ஒரு சமஸ்தானச் செல்வங்கள் மக்களுக்குப் பங்கிடப்படுகிறது என்றும் பத்திரிகைகள் விதம் விதமாகத் தலைப்பிட்டு புகழ்ந்து எழுதத் தொடங்கியிருந்தன.

பீமநாதபுரம் அகில இந்தியாவிலுமுள்ள பத்திரிகை களால் கூர்ந்து கவனிக்கப்பட்டது. மியூசியத் திறப்பு விழாவின் போது வந்திருந்த அமைச்சர், விழா மேடை மீது தனக்கும் தனசேகரனின் மாமாவுக்கும், தனசேகரனுக்கும் மேற்புறம் இருக்கைகள் போடப்பட்டிருந்ததைக் கண்டு, ! உங்கள் வருங்கால மனைவியை மட்டும் ஏன் கீழே அமரச் செய்து விட்டீர்கள்? அந்தப் பெண்ணைக் கூப்பிடுங்கள். ஆவர்களும் இங்கேயே அமரட்டும்' என்றார்.

தனசேகரன் தன் மாமன் மகளும் நாளைய மனைவியு மாகிய பெரியநாயகியிடம் சகஜமாகச் சிரித்துப் பேசிப் பழகுவதுண்டு என்றாலும் கல்யாணத்திற்கு இன்னும் சில நாட்களே இருக்கும்போது அப்படி எல்லாம் பேசினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று த:ங்கியபடி திரும்பி மாமாவின் பக்கம் பார்த்தான்.

"ஏன் நீயே கூப்பிடேன். பெரியநாயகியோட நீ பேச மாட்டியா?' என்று சிரித்தபடி அவனைக் கேட்டார் is, Too", - -

தனசேகரன் உடனே கீழே முதல் வரிசையிலே அமர்ந் திருந்த பெரியநாயகியைப் பார்த்து மேலே மேடையிலே வந்து அமருமாறு சைகை செய்தான். அவன் அப்படி மணமகளைச் சைகை செய்து அழைப்பதைப் பார்த்துக் கூட்டத்தில் எல்லோரும் கொல் லென்று வாய்விட்டுச் சிரித்தார்கள். தனசேகரனுக்கு வெட்கமாகப் போயிற்று பெரியநாயகி நாணப் புன்னகையோடு மேடை மீது வந்தமர்ந்தாள். - - . .

"இந்த மியூசியம்-அருமையான கலைப்பொருட்களை யும் ஒரு சமஸ்தானத்து அரச குடும்பத்து வரலாற்றையும் மட்டுமே உங்களுக்கு எடுத்துக்காட்டவில்லை. ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/228&oldid=553204" இலிருந்து மீள்விக்கப்பட்டது