பக்கம்:கற்சுவர்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 229

தனசேகரனால் அவளுடைய அந்த வேண்டுகோளை மறுக்க முடியவில்லை. பெரியநாயகியைக் கப்பிட்டுக் கொண்டு வந்து அவள் முன்னால் நிறுத்தி அறிமுகப்படுத்தி னான். அவள் தனக்கு சின்னம்மா முறையாக வேண்டும் என்றும், தன் அம்மாவுக்கு மிகவும் வேண்டியவள் என்றும் பெரியநாயகியிடம் தனசேகரன் பெருமையாகச் சொன் னான். தோடுகளைப் பெரியநாயகிக்கு அணிவித்துத் திருஷ்டி கழித்து வாழ்த்தினாள் அவள்.

"இங்கே நாளைக் காலையில் திருமண நேரத்தில் நான் நேரில் வந்து வாழ்த்த முடியுமோ, இல்லையோ, இப்போதே வாழ்த்தி விடுகிறேன்.' -

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? நாளைக் காலையில் திருமணத்துக்கும் நீங்கள் இருந்துவிட்டுத்தான் போக வேண்டும்.' - -

அவள் விடைபெற்றுக்கொண்டு போய்ச் சேர்ந்தாள்! தனசேகரன் பெரிய நாயகியிடம் அவளைப் பற்றி மிகவும் சிலாகித்துச் சொன்னான். தன் தாய்க்கு அவள் உடல்நல மின்றிப் படுத்த படுக்கையாயிருந்த காலத்தில் இந்த இளையராணி பெரிதும் உதவியாயிருந்ததை எல்லாம் விவரித்தான். அவள் மகன் கொடைக்கானலில் படிப்பது

பற்றியும் குறிப்பிட்டான். - -

மறுநாள் பொழுதும் விடிந்தது. திருமணச் சடங்கும் முடிந்தது. திருமண விருந்து என்று எதுவும் பரிமேய்ந்த நல்லூரில் ஏற்பாடு செய்யப்படவில்லை. பீமநாதபுரத்தில் தான் சிறிய அளவில் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வசந்த மண்டப மாளிகை தனசேகரனின் வீடாக மாறியிருந்ததால் அங்கேயே எளிய விருந்தும் நடந்தது. திருமணம் முடிந்த துமே அனைவரும் கார்களில் பீமநாதபுரம் திரும்பி விட்டனர். மாலையில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பில் கூட எளிமையே கடைப்பிடிக்கப்பட்டது. தனசேகரன்

க-15 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/231&oldid=553208" இலிருந்து மீள்விக்கப்பட்டது