பக்கம்:கற்சுவர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி $ጝ

எங்கிட்டக் கேளுங்க. நான் தரேன், செலவுலே ஒண்னும் கஞ்சத்தன்ம் வேண்டாம். குறைவில்லாமே எல்லாம் நடக் கட்டும். பூமி தானம், கோதானம், சுவர்ணதானம் எதுவுமே விடாமச் செஞ்சுடுங்க. தனசேகரன் சின்னப் ப்ையன்: அவனுக்கு ரொம்ப நேரம் பசி தாங்காது. பகல் பன்னிரண்டு மணிக்குள்ளாரவாச்சும் எல்லாம் முடிஞ்சிட்டா நல்லது." அதுக்குள்ளே முடிஞ்சிடும்னு நினைக்கிறேன், இந்தப் பொம்பிளைங்க தான். நாலு ராஜவீதி மட்டும் ப்ோதாது. நாலு ரதவீதியையும் சேர்த்து எட்டு வீதியும் சுத்தினப்புறம் தான் பிரேதத்தை மயானத்துக்குக் கொண்டு போகணும்னு கலாட்டா பண்றாங்க. பேரப்பிள்ளைங்கன்னு ஒரு பெரிய பட்டாளத்தைக் கூட்டியாந்து, இவங்க அத்தினி பேரும் நெய்ப்பந்தம் பிடிக்கணும்னு தொந்தரவு பண்றாங்க. நான் சொன்னாக் கேட்க மாட்டேங்கறாங்க..."

"அவங்களை நான் பார்த்துக்கிறேன். நீங்க ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க. முதல்லே நாளை மத்தா நாளு அத்தினி பேரையும் அடிச்சுப் பத்தி வெளியிலே துரத்தி அரண்மனையை "டெட்டால் தெளிச்சு சுத்தப் படுத்தியாகணும். என்ன சொல்றீங்க...' - -

"அதைப் பெரிய மகாராஜா எப்பவோ செஞ்சிருக்' கணுங்க. செஞ்சிருந்தார்னா இன்னிக்கி இந்த அரண்மனை கடன்பட்டு இப்பிடித் திவால் ஆகிற நிலைமைக்கு வந்திருக் காது. நாங்கள் ளாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். அவர் கேட்கலை' என்றார் சேர்வை. சேர்வையிடம் ரொக்கமாக அவர் கேட்ட தொகைக்கு ஒரு ரூபாய்களாக வும் இரண்டு. ஐந்து, பத்து. நூறு ரூபாய்களாகவும், சில்லறைக் காசுகளாகவும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டுத் தனசேகரனையும் உடனழைத்துக்கொண்டு அரண் மனையின் உட்பகுதிக்குச் சென்றார் தங்கபாண்டியன். அரண்மனை நகைகள் உள்ள கருவூல அறை, மகாராஜாவின்

க-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/39&oldid=553011" இலிருந்து மீள்விக்கப்பட்டது