பக்கம்:கற்சுவர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 茉星

உன்க்குக் கட்டிாயம் ஏதாவது சொல்லியாகணும்னு இருந்தா நாளைக்கிச் சாயங்காலமா வந்து பேசிக்கோ' என்று கறாராகச் சொல்லிவிட்டார். தனசேகரன் அந்தக் கோமணீஸ்வரனோடு பேசவே இல்லை. மாமாவுடைது கோபத்தைக் கண்டு புயற்து கோமலீஸ்வரன் மெல்ல விலகிப் போய்விட்டான். அவன் தலை அந்தப் பக்கம் மறைந்ததும். "கொஞ்சம் இடங் கொடுத்தோமோ அட்டை உறிஞ்சற மாதிரி இரத்தத்தை உறிஞ்சிப்பிடுவாங்க கொலைகாரப் பசங்க" என்றார் மாமா. ‘.

'அவங்க என்ன பண்ணுவாங்க! எல்லாம் அப்பா கொடுத்த இடம்தானே,' என்று தனசேகரன் சொன்னான்.

"சரி வா தம்பி! எங்கேயாவது கொஞ்ச நேரம் தூங்க லாம். காரியஸ்தர் கிட்டச் சொல்லி அந்த வசந்த மண்டபம் கஸ்ட்-ஹவுஸ் சாவியைக் கொண்டாரச் சொல்ல லாம். அங்கேதான் கொஞ்சம் வெளித் தொந்தரவு இல்லாமே நிம்மதியா இருக்கும்' என்று சொல்லியபடியே அங்கே தென்பட்ட அரண்மனைக் காவலாளி ஒருவனைக் கைதட்டி அருகே கூப்பிட்டார் மாமா. அவன் பயபக்தி யோடு அருகே வந்து ஏழடி விலகி நின்று கைகட்டி வாய் பொத்திக் கேட்கலானான். -

"சின்னராஜாவும் அவங்க மாமாவும் கொஞ்ச நேரம், துரங்கணும்னாங்கன்னு அந்த வசந்த மண்டபம் கஸ்ட் ஹவுஸ் சாவியைக் காரியஸ்தர் கிட்டக் கேட்டு வாங்கிட்டு லாப்பா' என்று மாமா அவனுக்கு உத்திரவு போட்டார். அவன் சாவியை வாங்கிக் கொண்டு வருவதற்காகக் காரி யஸ்தரைத் தேடிக் கொண்டு ஓடினான். சாவி வருவதற்.

·磁序”恶 வசந்த மண்டபம், கஸ்ட் ஹவுஸ்" முகப்பில் போய் நின்றார்கள். அவர்கள் இருவரும். அந்த அரண்மனை எல்லைக்குள்ளேயே மிகவும் சுகமானதும், ஓர் அழகிய ஏரிக்கு நடுவில் மைய மண்டபம் போல மரஞ் செடி கொடி சூழ தோட்டத்தினிடையே அமைந்திருப்பதுமான "வசந்தகால விருந்தினர் விடுதி"தான் சிறப்பானது. முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/43&oldid=553015" இலிருந்து மீள்விக்கப்பட்டது