பக்கம்:கற்சுவர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔6 கற்சுவர்கள்

சேகரனுக்கும், காரியஸ்தருக்கும் தனிதனியாக வணக்கம் செலுத்தினாள். அழகு கொஞ்சும் அந்த எழில் வடிவத்தைத் தங்களிடையே தோன்றக் கண்டதும் அவர்கள் அனைவருமே சமாளித்துக் கொள்வதற்குச் சில கணங்கள் பிடித்தன. மாமா தங்கபாண்டியன்தான் முதலில் சுதாரித்துக் கொண்டு அவளிடம் நேருக்குநேர் கேட்டார் : -

ஏன்ம்மா? காலமான பெரியராஜா உங்களுக்காக எவ்வளவோ செலவழிச்சிருக்காரு. நீங்களும் அதை மறற் திருக்க மாட்டிங்க. அடையாறிலே அந்தப் பங்களாஅதான்-இப்ப நீங்க இருக்கீங்களே அதை உங்களுக்கு வாங்கி வைக்கணும்கிறதுக்காக அவர் இங்கே ஊர்லே அயனான தஞ்சை நிலங்களைப் பல ஏக்கர் வந்த விலைக்கு அவசர அவசரமாக வித்தாரு. எங்களுக்கெல்லாம்கூட அது பிடிக்கலே, ஆனா இப்போ இன்னமும் நீங்க ஏதோ கிளெய்ம் பண்ற மாதிரிக் கோமளிஸ்வரன் சொல் றானே?" - -

நோ.நோ.அப்படி ஒ ண் ணு மி ல் .ே ல. அவரு உயில்லே என் சம்பந்தமா ஏதாவது இருக்கான்னு எனக்குத் தெரியனும். அவ்வளவுதான்.

'இருக்கிறதாத் தெரியல. அப்படி இருந்தால் அந்த விவரம் முறைப்படி உங்களுக்கு ரெஜிஸ்தர் தபால்லே வந்து சேரும். நீங்க வீணா ஏன் இங்கே வந்து தங்கிக் கஷ்டப்படனும்னுதான் எனக்குப் புரியலே...'

" எப்படி இருந்தாலும் நாங்க இன்னிக்கிச் சாயங்காலம் கார்லே புறப்படறோம். அதான் உங்க ரெண்டு பேரிட்ட வுமே நேர்லே சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்' என்று சொல்லிக் கொண்டு புறப்படத் தயாராகி விட்டாள் அவள். * - .

"என்னமோ எங்களையெல்லாம் மறந்துடாதீங்க. முகாராஜா மெட்ராஸ் "கேம்ப்'னா நான் இராப்பகலா வீடு வாசலை மறந்து அவரோட சுத்தியிருக்கேன்! என்னையெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/58&oldid=553030" இலிருந்து மீள்விக்கப்பட்டது