பக்கம்:கற்சுவர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。58 கற்சுவர்கள்

பெரிய மகாராஜாவை எரியூட்டிய தினத்தன்று இரவே: நெருங்கிய உறவினர்களையும் அரண்மனைக் காரியஸ் தரை பும் கலந்து கொண்டு தனசேகரனை அருகில் வைத்துப் பல பிரச்னைகளுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டார் மாமா அடித்துப் பேசி வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக விஷயங் களை அவரால் முடிக்க முடிந்தது. சுபாவத்திலேயே இளகிய மனமும் எளிமையும், பிறர் முகம் வாடப் பேசிப், பழக்கப்படாத இயல்பும் உள்ளவனாக இருந்த தனசேகரன், மாமா பிரச்னைகளை ஒவ்வொன்றாகத் தீர்த்து வைத்தி, வேகத்தைப் பார்த்து வியந்தான், மாமாவின் விவகார. ஞானம் அதிசயிக்கத்தக்கதாயிருந்தது. .

கடைசியாக மாமா இளையராணிகள் பிரச்னையைப் பற்றி ஆரம்பித்த போது காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை தம் மனத்திலிருந்த சில விஷயங்களை வெளிப் படையாகச் சொன்னார். அவை மிக மிகக் கசப்பானவை. யாக இருந்தன. с

'நீங்க இந்தப் பிரச்னையை எப்படித் தீர்த்துக்கட்டிக் சண்டை சச்சரவு இல்லாமே சுமுகமா அவங்களை வெளியே அனுப்பப் போlங்கன்னு எனக்குப் புரியவே இல்லை. அவங்க விஷயம் வரவரப் பெரிய நியூஸன்ஸாப் போச்சு. அரண்மனைப் பாத்திரங்களிலே இருந்து தோட்டத்து விறகுக்கட்டை வரை எதை எடுத்தும் விலைக்கு வித்துப் புடறாங்க, வாசனைச் சோப்பு. ஃபேஸ்பவுடர் ஷாம்பூன்னு: அவங்க அத்தனை பேருக்கும் பொழுது விடிஞ்சாப் பொழுது போனா எத்தினி எத்தினியோ செலவுக்குப் பணம் தேவைப் படுது. கைக்கு அகப்பட்டதை எடுத்து வித்துடறாங்க. பஜார்லே அரண்மனை முத்திரையோட கூடின பண்டங்கள் 'ஸெகண்ட்ஹேண்ட் விற்பனைக்குப் போறதுங்கிறது. இப்பல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாப் போச்சு. அந்த மாதிரி வெளியிலே விற்பனைக்குப் போற பண்டங். களிலே சிலது போலீஸ் ஸ்டேஷன் வரைச் சிரிப்பாய்ச் சிரிச்சுக் காரியஸ்தர்ங்கிற முறையிலே என்னைக் கூப்பிட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/60&oldid=553032" இலிருந்து மீள்விக்கப்பட்டது