பக்கம்:கற்சுவர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 6 I

கலாம். ஆனா கொடுக்க வேண்டிய கடன் அதுக்குமேலே

யும் இருக்கும் போலத் தெரியுது."

"கடனாளின்னு பேரெடுக்கிறதைப் போல அவமானம் வேற இல்லே காரியஸ்தரே! எங்கப்பா சொத்தோ அரண் மனைக் காசோ எனக்கு ஒரு சல்லி வேண்டாம். கடனைத் தீர்த்தால் போதும். நான் படிச்சிருக்கேன். என்னாலே ஏதோ உத்தியோகம் பார்த்துச் சம்பாதிச்சுக்க முடியும். எனக்கு மீத்துத் தரணும்னு இங்கே யாரும் கவலைப்பட

வேண்டியதில்லே' என்றான். தனசேகரன். அவன் திடீரென்று அவசரப்பட்டு அப்படிச் சொல்லியது மாமா வுக்குப் பிடிக்கவில்லை. "கொஞ்சம் பொறு தம்பி!

அவசரப்படாதே! நீ பாட்டுக்கு அவசரப்பட்டு எதையாவது சொல்லி வச்சேன்னா அதுக்குக் கையும் காலும் வச்சு, "இளையராஜா அரண்மனைச் சொத்துலே ஒரு துரும்பு கூடத் தனக்கு வேண்டாம்னுட்டாராம்’னு சேதியைப் பரப்பிடுவாங்க. நீ இப்போ இங்கே சொன்னதிலே தப்பில்லே. நம்ம காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை ரொம்ப தன்மையான மனுஷர். அவர் கிட்டேருந்து சமா சாரம் எதுவும் வெளியிலே போகாது. பொது இடங்களிலே பெருந்தன்மையா இருக்கிறதைக்கூட மறைச்சு இரகசியமா வச்சுக்கணும். நமது பெருந்தன்மையோ தியாகமோ அளவுக்கதிகமாக விளம்பரமாகிவிட்டால் அப்புறம் நம்ம தான் அதனாலே ரொம்ப சிரமப்பட வேண்டியிருக்கும்!"

'கடைசி நாலஞ்சு மாசங்கள்ளே மகாராஜா செஞ்ச சில காரியங்கள் எனக்கே பிடிக்கலிங்க. ப்ரீவி பர்ஸ்’ நின்னப்புறம் அவரு கர ஸ்பாண்டண்டா இருந்த பீம நாத புரம் மகாராஜாஸ் ஹைஸ்கூல், கல்லூரி ஆசிரியர்கள். தலைமையாசிரியர்கள் சம்பளத்திலேகூடத் தலைக்கு இருபது இருபத்தஞ்சுன்னு பிடிச்சு முழுச் சம்பளத்துக் கும் கையெழுத்துப் போடச் சொல்வி அவங்களை நிர்ப்ப ந்தப் படுத்தி வாங்கி எடுத்துக்கிட்டாரு. முழுத் தொகைக் கும் அவங்க கையெழுத்துப் போட்டு முடிச்சப்புறம் பணத் தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/63&oldid=553035" இலிருந்து மீள்விக்கப்பட்டது