பக்கம்:கற்சுவர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கற்சுவர்கள்

அன்றைக்குப் பகல் உணவு முடிந்ததும் காரியஸ்தர் எதிர்பார்த்தபடியே தனசேகரனும் மாமா தங்கபாண்டிப் னும் சிறிது நேரம் ஒய்வு எடுத்துக்கோள்ளப் போய்விட் டார்கள். காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை தேவஸ் தான அலுவலகத்துக்குப் போய் நிர்வாக அதிகாரியைச் சந்தித்தார். காரியஸ்தர் வந்ததும் நிர்வாக அதிகாரி முதல் வேலையாகத் தமது அறைக் கதவை அடைத்து உட்புற மாகத் தாழிட்டார். அந்த விஷயத்தில் நிர்வாகஸ்தர் ஏன் அவ்வளவு பதறுகிறார் என்பது காரியஸ்தருக்கு வியப்பாக இருந்தது. ஆனாலும் தம்முடைய வியப்பை அடக்கிக் கொண்டு பொறுமையாகக் காத்திருந்தார் அவர். நிர்வாக அதிகாரி விவரங்களைக் கூறத் தொடங்கினார். நிர்வாக அதிகாரி கூறியதிலிருந்து மகாராஜாவே ஏராளமான தங்க் நகைகளைக் கோவிலிலிருந்து எடுத்து விற்றுவிட்டுப் பதிலுக்குக் 'கில்ட்" நகைகளை வைத்திருப்பது தெரிய வந்தது: மகாராஜா அப்படிச் செய்திருக்கக்கூடும் என்பது பெரிய கருப்பன் சேர்வைக்குத் தெரிந்துதான் இருந்தது.

6

மாமாவும் தனசேகரனும் ஸ்டாக் டேக்கிங்'கோ ஆடிட்டோ செய்யவில்லை என்றாலும் அதைவிடக் கடுமையாக எல்லாவற்றையும் பரிசோதனை செய்து விட்டார்கள். காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வை, இந்தப் பரிமேய்ந்த நல்லூர்த் தேவஸ்தான விஷயமாய்ப் பெரியராஜா எல்லாமே கவனிச்சதாலே இங்கே இந்தப் ஃபைல்களிலே எதையும் அவர் அரண்மனை ஆபீஸ்-க்கு அனுப்பிச்சதில்லே. அதுனாலே இங்கே என்ன என்ன் சரியா இருக்கு. என்னென்ன தப்பா இருக்குங்கறதைக், கூட எங்களாலே பிரிச்சுக் கண்டு பிடிக்க முடியாது என்று முதலிலேயே அந்தத் தேவஸ்தானக் கணக்குகளிலிருந்து தம்மை விலக்கிக்கொண்டு விட்டார். அவர் சொல்லியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/82&oldid=553054" இலிருந்து மீள்விக்கப்பட்டது