பக்கம்:கற்சுவர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி so

பதற்கு ஏதாவது புத்தகம் கிடைத்தால் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டுத் தூங்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. தங்கியிருந்த இடத்தில் ஒரு ஜன்னலோரமாகச் சில பழைய வாரப்பத்திரிகைகளும் அவற்றின் சிறப்பு மலர்களும் கிடந்தன. அவற்றில் தூசி படிந்திருந்தது. அவற்றில் ஒன்றை எடுத்துத் துாசியைத் தட்டிப் படிக்கத் தொடங்கினான் தனசேகரன். அந்தப் பத்திரிகையில் வெளிவந்திருந்த ஒரு சிறுகதை அவனை வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுகின்றி வெகுவாக அவனு: டைய கவனத்தையும் உடனே கவர்ந்தது. தன்னுடைய சமஸ்தானத்தையும் குடும்பத்தையுமே கூர்ந்து கவனித்து யாரோ அதை எழுதியிருப்பதுபோல் அவனுக்குப்பட்டது. கதையின் தலைப்பே அவன் கவனத்தை உடனே கவர்ந்து இழுப்பதாக அமைந்திருந்தது. -

ஒர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது! 'இளைய ராஜாவை மெட்ராஸ்ைேருந்து யாரோ பார்க்கணும்னு வந்திருக்காங்க" என்ற குரலைக் கேட்டு ஆத்திரத்தோடு தலைநிமிர்ந்து திரும்பிய ரகுநாதபாண்டிய ராஜபூபதி என்ற ஆர்.பி. பூபதி,

இந்தா. மருதமுத்து உனக்கு எத்தினிவாட்டி சொல்லி யிருக்கேன்? இளையராஜா அந்த ராஜா இந்த ராஜா எல்லாம் கூடாது. சும்மா ஐயா'ன்னு கூப்பிட்டாப் போதும்னு என்று வேலைக்காரனைக் கண்டித்து இரைந்தான். . . . . -

அப்படி இரைந்தபோது அவனுடைய முகத்தில் கடுங் கோபம் தெரி ந் த து. வேலைக்காரன் மருதமுத்து "விலிட்டிங் கார்டு ஒன்றைப் பூபதியிடம்நீட்டிக் கொண்டே கூறினான்: -

"நீங்க வேண்டாம்னாலும் வளமுறையை எப்பிடி விட்டு. முடியும் இளையராஜா' + . .

á一好

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/87&oldid=553059" இலிருந்து மீள்விக்கப்பட்டது