பக்கம்:கற்பக மலர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பக மலர் 崭

இருக்கிறது, பாருங்கள்’ என்கிருர். கற்பக மலரை நாம் கண்டதில்லை. அதன் இயல்புகள் கற்பனையால் தெரிந்து கொண்டவை. அது கற்பனேக் கற்பக மலர்; இது உண்மைக் கற்பக மலர். அதுதான் திருக்குறள்.

-குன்ருத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல். .

கற்பக மலர் கற்பகத்தின் பூங்கொம்பிலே பூத்தது. இந்தக் குறள் மலர் வள்ளுவர் திருவாயிலே மலர்ந்தது; 'திருவாய் மலர்ந்தருளினர்' என்று சொல்வது வழக்கம் அல்லவா? திருவள்ளுவராகிய கற்பகம் நெடுநாள் மன்னு வது. எப்படிக் கற்பகம் மக்கள் உள்ளத்தில் நினைவாக மன்னுகிறதோ, அப்படி அப்புலவர் புகழுடம்போடு மக்கள் உள்ளத்தே மன்னுகிருர். அவர் திருக்குறள் ஒன்றுதான பாடியிருப்பார்? இந்த ஒரு நூலைத்தான் அவர் எழுதினர்; அது உலகப் புகழ் பெற்றுவிட்டது” என்று அபிமானத்தால் சொல்லலாம். குழந்தை பிறந்தவுடன் கால் வீசி நடக்க முடியுமா? பல பல நூல்களே இயற்றிப் பிறகே இந்த அரிய நூலே அப்புலவர் வழங்கியிருக்க வேண்டும். அந்த நூல்க ளெல்லாம் மலர் தோன்றுவதற்கு முன் தோன்றிய தளிர்களாக இருக்க, கடைசியில் வந்த குறளோ தளிர் களுக்குப் பின் மலர்ந்த மலரைப்போல விளங்குகிறது. செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்' என்று அடைகளுடன் புலவர் சொல்வது குறளுக்கும் பொருத்த மாக இருக்கிறது.

தெய்வத் திருமலர் என்பது கற்பகத்தின் உயர்வைக்

குறிக்கிறது. அந்தத் தெய்வத் தன்மை வள்ளுவருக்கும் உண்டு. தெய்வப் புலமைத் திருவள்ளுவர்” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/14&oldid=553224" இலிருந்து மீள்விக்கப்பட்டது