பக்கம்:கற்பக மலர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

à கற்பக ம்லர்

புலவர்கள் மிகவும் மதிப்புடன் அப்புலவரைச் சொல்வது வழக்கம். தெய்வத் திருவள்ளுவர்', தேவர் திருவள்ளுவர்” (திருவள்ளுவமாலை, - 1, 19, 39, 41,49) என்று திருவள்ளுவ மாலையில் புலவர்கள் பாராட்டியிருக் ஒருர்கள். திருக்குறளுக்கு ஈடும் எடுப்பும் இல்லாத அரிய உரையைச் செய்த பரிமேலழகர், ஈண்டுத் தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் 5T GŪT எடுத்துக்கொள்ளப்பட்டது. என்று உரை எழுதத் தொடங்கும்போது அவதாரிகையிலே எழுதுகிரு.ர். - .

திருக்குறளைக் கற்பக மலராகச் சொன்ன புலவர் தாம் அப்படிச் சொல்வதற் குரிய காரணங்களையும் சொல்கிருர்; கற்பக மலருக்கும் திருக்குறளுக்கும் பொது வாக உள்ள இயல்புகளே எடுத்துக் கூறுகிருர்,

கற்பக மலர் என்றும் வாடாதது. திருக்குறளும் என்றும் புலராதது. நூல்கள் பல வகைப்படும். பல நூல்கள், இயற்றிய ஆசிரியர் காலத்திலே மங்கி மறைந்து போகும். சில நூல்கள் ஆசிரியர் மறைக் தாலும் தாம் மறையாது ஆசிரியருடைய புகழை கிலே காட்டிக்கொண்டிருக்கும். இப்போது அச்சில் வரு கின்ற எல்லாமே நூல்கள் என்றுதான் பேசப்படு கின்றன. தினசரிப் பத்திரிகையும் அச்சிட்டதுதான். ஆனல் அதன் வாழ்வு ஒரே ஒரு நாள்; சில சமயங் களில் காலப்பதிப்பை மாலைப் பதிப்பு மங்கச் செய்து விடுகிறது. அதன் காகிதம் அதற்குள் கிழிந்து விடு கிறதா? எழுத்து மங்கிவிடுகிறதா? அல்லது தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/15&oldid=553225" இலிருந்து மீள்விக்கப்பட்டது