பக்கம்:கற்பக மலர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பக மலர் o

எழுத்து வேறு ஏதாவது எழுத்தாக மாறிவிடுகிறதா? ஒன்றும் இல்லை. ஆனாலும் முதல் நாள் செய்தித் தாளாக மதிப்புப்பெற்ற அது மறுநாள் புளி மடிக்கும் காகிதமாகி விடுகிறது. அதில் உள்ள எழுத்தின் பயன் போய்விடுகிறது. - -

நூல்களிலும் சில மாதங்களே வாழ்பவை உண்டு. திருக்குறள் தோன்றிக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டு கள் ஆகிவிட்டன. அது இன்னும் உருப்படியாக விளக்கத் தோடு கிலவுகிறது. என்றும் புலராத நூல் அது என்று சொல்வதற்குத் தடை என்ன?

சில நூல்கள் பழமையைப் புலப்படுத்திக் கொண்டு "கிற்கும்; அவற்றை இக்காலத்தில் பயன்படுத்திக் கொள் ளாமல் இருப்பார்கள். மொகெஞ்சதடோவில் ஒரு பழைய சிப்புக் கிடைத்தது என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் அருமையாகப் பாது காப்போம். அந்தக் காலத்துச் சீப்பு என்று பெருமை யாகப் பேசுவோம். அதைக் காட்சிச் சாலேயில் வைத்து உலகத்தாருக் கெல்லாம் காட்டுவோம். ஆனால் அதை நாம் சீப்பாக உபயோகப்படுத்த மாட் டோம். இப்போது எத்த்னேயோ நாகரிகமான சீப் புக்கள் வந்துவிட்டன. மொகெஞ்சதடோச் சிப்புப் பழமைப்பொருள்; புதுமைப் பொருளோடு ஒன்ருக கின்று பயன் தராது. காலம் அதைப் பயன் அற்றதாக்கி விட்டது. - - .

நூல்களிலும் சில, பழமையின் அடையாளமாக வைத்திருப்பனவாக இருக்கலாம்; ஆல்ை இந்தக் காலத்தின் நடைமுறைக்குப் பயன்படாமல் இருக்கும். திருக்குறள் அத்தகையது அன்று. எத்தனே ஆண்டுகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/16&oldid=553226" இலிருந்து மீள்விக்கப்பட்டது