பக்கம்:கற்பக மலர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கற்பக மலர்

சென்ருலும் மங்காமல் நின்று மலர்ச்சியுடன் விளங்கும் கற்பக மலரைப்போல, எல்லாக் காலத்திலும் பயன் தந்து விளக்கத்துடன் நிலவுகிறது.

யாணர்நாட் செல்லுகினும் நின்று அலர்ந்து என்று பாடுகிருர் புலவர். . .

யாணர் என்பதற்குப் புதுவரவு என்று பொருள். காலம் போய்க்கொண்டே இருக்கிறது. காலத்துக்கு ஏற்பப் புதிய புதிய கருத்துக்களும் வழக்கங்களும் நாகரிகப் பாணிகளும் தோன்றிக் கொண்டே இருக் கின்றன. அந்த மாற்றத்தில் அடிபட்டுப் பல நூல்கள் இறந்து போகின்றன. புதிய புதிய கருத்துக்களும் கொள்கைகளும் நம்பிக்கைகளும் வந்தாலும் திருக் குறள் பயனின்றி ஒழியாமல் கிற்கிறது. கால வெள்ளத் தோடு போகாமல் கிலேகிற்பதோடு இன்றும் அலர்ந்து, 'மலர்ச்சி பெற்று, மனித வாழ்க்கைக்குப் பயன் தருவதாக மணந்து விளங்குகிறது. காலத்துக்கு ஏற்றவகையில் விரிவு பெற்று நிலவுகிறது. - -

- இதற்கு ஏதாவது தக்க காரணம் இருக்க வேண்டும். காலத்தால் மனிதனுடைய புறக்கோலங்களே மிகுதியாக மாறுகின்றன. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்தபடி நம்முடைய நாடு இப்போது இருக்கவில்லை. அக்காலத்தில் இருந்த அமைப்போடு நம் ஊர்கள் இருக்க வில்லை. பழங்காலத்தில் சில துளைகளேயே சாளரமென்று சொல்லி வைத்து வாழ்ந்த வீடுகளைப்போல நம் வீடுகள் இப்போது இல்லை; பெரிய பெரிய சன்னல்களே வைத்து வீடு கட்டுகிருேம். நம்முடைய ஆடைகளில்தான் எத்தனை மாற்றம்! மகளிர்களுடைய ஆடைகளில் மாதத்துக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/17&oldid=553227" இலிருந்து மீள்விக்கப்பட்டது