பக்கம்:கற்பக மலர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவன் திருவடி

திருக்குறளில் முன்வாயிற் பூஞ்சோலையாக நிற்பது கடவுள் வாழ்த்து என்னும் முதல் அதிகாரம். அறத்துப் பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பெரும் பகுதியாகப் பிரித்துக்கொண்டு நூல் செய்ய வந்த திருவள்ளுவர் முதலில் நான்கு அதிகாரங்களில் பாயிரம் என்ற பகுதியை வைத்திருக்கிருர். பாயிரம் என்பது முகவுரையைப் போல நூல் முழுவதற்கும் பொதுவான செய்திகளேச் சொல்வது. கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்களும் சேர்ந்து திருக்குறளில் பாயிரம் என்ற பகுதியாக அமைந்திருக்கின்றன. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று வகைகளுக்கும் உபகாரப்படுவனவாகவும், அவற்றிற்கெல்லாம் பொதுவாகவும் இருப்பவை அந்த நான்கும் என்ற கருத்தால் அவற்றை முன்னே வைத்தார்.

பாயிரத்தின் முதல் அதிகாரமாக நிற்பது கடவுள் வாழ்த்து. பொதுவாக நூல்களில் உள்ள கடவுள் வாழ்த்து, அந்த நூல் இனிது முடியும் பொருட்டுக் கடவுளே வாழ்த்திய துதியாக அமைவது வழக்கம். அது ஏற்புடைக் கடவுள் வணக்கம் என்றும், வழிபடு கடவுள் வணக்கம் என்றும் இரண்டு வகைப்படும். நூலின் பொருளுக்கு ஏற்ற வகையில் அமைந்த கடவுள் வணக்கத்தை ஏற்புடைக் கடவுள் வணக்கம் என்றும், ஆசிரியர் தாம் வழிபடு கடவுளேத் துதித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/25&oldid=553235" இலிருந்து மீள்விக்கப்பட்டது