பக்கம்:கற்பக மலர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவன் திருவடி 1 ኛ

துப் பாடுவதை வழிபடு கடவுள் வணக்கம் என்றும் சொல்வார்கள். ஒருவர் இராமாயணத்தைப் புதிதாகப் பாடுவதாக வைத்துக் கொள்வோம். அதில் முதலில் இராமனுடைய வணக்கத்தை அமைத்தால், அது ஏற் புடைக் கடவுள் வணக்கமாகும். நூலே இயற்றும் ஆசிரியர் முருகனடியாராக இருந்து முதலில் முருக இணுடைய துதியை அமைத்தால், அது வழிபடு கடவுள் வணக்கமாகும்.

திருவள்ளுவர் ஏற்புடைக் கடவுளே வாழ்த்தினர் என்று பரிமேலழகர் கருதுகிருர்,

'அஃதாவது, கவி தான் வழிபடும் கடவுளே யாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளேயா தல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளே என உணர்க. என்னே? சத்துவம் முதலிய குணங்களால் மூன்ருகிய உறுதிப்பொருட்கு அவற்ருன் மூவராகிய முதற் கடவுளரோடு இயைபு உண்டாகலான். அம்மூன்று பொருளையும் கூறலுற்ருர்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறையாதலின், இவ்வாழ்த்து அம்முவர்க்கும் பொதுப்படக் கூறினர் என்று உணர்க’ . r

என்று அவர் எழுதுகிருர், கவிஞன் தான் பாட மேற் கொண்ட நூல் இனிது முடியும் பொருட்டுக் கடவுளே வாழ்த்தும் வகையில் இவ்வதிகாரம் அமைந்தது என்ற கருத்தை முதலில் கொண்டு, அப்பால் ஏற்புடைக் கடவுள் வாழ்த்து இது என்று வகை காட்டுகிருர். அவதாரிகையில், எடுத்துக் கொண்ட இலக்கியம் இனிது முடிதற் பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறு கின்ருர்’ என்று அவர் செய்யும் தோற்றுவாயினுல் இது புலகுைம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/26&oldid=553236" இலிருந்து மீள்விக்கப்பட்டது