பக்கம்:கற்பக மலர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 - கற்பக மலர்

இறைவன உருவமுடையவகை வைத்து வழி படும் முறை இந்த நாட்டுச் சமயங்களுக்கெல்லாம் பொதுவான வழக்கம். இயல்பாகக் குறியும் குணமும் கடந்து கிற்கும் அவன் பெயரும் உருவமும் உடைய' உயிர்களின்பால் உள்ள கருணையால் பல உருவங் களுடனும் பெயர்களுடனும் எழுந்தருளுகிருன். மனத்தையுடைய மனிதன் இறைவனைத் தியானம் செய்ய வேண்டுமானல் அவனுக்கு உருவம் இருந்தா லன்றி இயலாது. மனம் காமரூப நாட்டமுடையது. கடவுளுக்கு உருவம் இல்லை என்று கொள்ளும் சமயத் தினரும் கண்ணே மூடித் தியானம் புரியும்போது ஏதாவது ஒன்றை-கட்டிடமோ, குறியோ-எண்ணுவது தான் இயல்பு. மனத்தினுல் எண்ணும்போது உருவம் இல்லா மல் அந்தத் தியானம் அமைவதால்ை இரண்டு வகையில்தான் அது முடியும். ஒரே இருளாக உள் ளத்தே தோன்றும்; அல்லது ஒளியாகத் தோன்றும். இரு ளாகத் தோன்றுவதே பெரும்பாலோருடைய அநுபவம்; பல காலம் பயிற்சி செய்தவர்களுக்கே முழு ஒளியாகத் தோன்றும். -- -

இருளாகத் தோன்றுவதை மாற்றி மனம் ஒரு மைப்பட வேண்டுமானல் எந்த உருவையாவது பற்றிக்கொள்ள வேண்டும். அதனுல்தான் தனக் கென்று உருவம் இல்லாத இறைவன் பல பல வடிவங்களுடன் வருவதாகப் பெரியோர்கள் கூறி யுள்ளார்கள்.

'கடவுளுக்கு உருவம் உண்டு’ என்பதே வள்ளு வர் கருத்து. நம் தலையால் அவன் தாளே வணங்க வேண்டும்’ என்று சொல்வதனல் இதன. உணரலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/29&oldid=553239" இலிருந்து மீள்விக்கப்பட்டது