பக்கம்:கற்பக மலர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவன் திருவடி 总芷

பொதுநூல் இயற்ற வந்த அவருக்கு இறைவனுடைய வடிவங்களில் எதைச் சொல்வது என்ற கேள்வி தோன்றியிருக்க வேண்டும். ஏதேனும் ஒன்றைச் சொன்னல் மற்றவற்றைப் புறக்கணித்ததாக முடியும். உருவத்தைச் சொல்ல வேண்டும்; ஆனால் ஒரு குறிப்பிட்ட வடிவத்தைச் சொல்லக்கூடாது. இந்தச் சிக்கலே எப்படித் தீர்ப்பது?

திருவள்ளுவர் பேரறிஞர். கடவுளின் உருவத்தில் எல்லோரும் கொள்ளும் பொதுவான பகுதி எது என்று பார்த்தார். ஆறுமுகன், ஆனேமுகன், ஐந்து முகன், சிங்கமுகன் என்று முகத்திலே வேறுபாடு உண்டு. ஆனல் திருவடிகளில் வேறுபாடு இல்லை. எல்லாத் தெய்வங்களுக்கும் திருவடி இரண்டு; அவை தாமரை போல இருக்கும். திருவடியைக் கண்டாருக்கு வேறு பாட்டுணர்வே எழாது. ஆதலின் கடவுள் வாழ்த்தில் இறைவன் திருவடியைப் பற்றியே சொன்னர். ஏழு பாடல்களில் கற்ருள், மாணடி, அடி, தாள் என்றே சொல்லியிருக்கிருர், -

இறைவனுடைய வழிபாட்டில் அவனுடைய அடியைத் தொழுவதே இலக்கு. கம்மாழ்வார், 'துயரறு சுடரடி தொழுதெழென் மனனே’ என்று தொடங்கினர். 'நமச்சிவாய வாஅழ்க, நாதன்தாள் வாழ்க’ என்று தொடங்கினர் மணிவாசகர். -

இறைவனுடைய தொடர்பு நமக்கு இருக்க வேண்டுமானுல் அவனுடைய தாளே வணங்க வேண்டும். அவனுடைய வடிவைக் கண்டு களித்துப் பின்பு அவன் தாளில் புகலடைய வேண்டும். சிறு பையன் பம்பரத்தைக் கயிற்ருல் சுற்றி வீசுகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/30&oldid=553240" இலிருந்து மீள்விக்கப்பட்டது