பக்கம்:கற்பக மலர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறைவன் திருவடி sś

களுக்கு அடியார் என்ற பெயர் இருப்பதை எண்ணிப் பார்த்தால் இவ்வுண்மை புலகுைம். முகத்தார், தோளார் என்று சொல்லாமல் அடியார் என்று சொல் வதற்குக் காரணம், இறைவன் திருவடியோடு தொடர் புடைமையே.

இறைவன் குணம் இறந்தவன், குறி கடந்தவைைலும் குணம் குறியுடையவர்களின் பொருட்டு அவற்றை உடைய வகை எழுந்தருளுகிருன். நாம் தலேயால் வணங்கி வழிபட வேண்டுமென்றே அவ்வாறு எழுந்தருளுகிருன், அதனல் தான் வள்ளுவர்,

கோளில் பொறியிற் குணமிலவே, எண்குணத்தான் தாளை வணங்காத் தலை என்ருர், எண்குணத்தான் என்பது குணமுடையான் என்

பதையும், தாள் என்பது வடிவுடையான் என்பதையும் புலப்படுத்தி கிற்கின்றன.

திருவள்ளுவர் ஒவ்வோர் அதிகாரத்திலும் எடுத்துக் கொண்ட பொருளிள் இலக்கணத்தைக் கூறிப் பின்பு அது சம்பந்தமானவற்றைச் சொல்லுவார்.

அந்த வகையில் கடவுள் வாழ்த்தின் முதற்பாட்டு இறைவனுடைய முழுமுதல் தன்மையை எடுத்துச் சொல்கிறது. -

திருக்குறள் வெறும் நீதிநூல் மாத்திரம் அன்று; கவிதை நூலாகவும் இருக்கிறது. கவிஞர்கள் எடுத் தாளும் அணிகளிற் சிறந்தது உவமை. கடவுளின் முதன்மையை ஒர் உவமையில்ை சொல்ல வருகிறர் கவிஞர் திருவள்ளுவர். எழுத்துக்களுக்கெல்லாம் அகரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/32&oldid=553242" இலிருந்து மீள்விக்கப்பட்டது