பக்கம்:கற்பக மலர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - கற்பக மலர்

முதலாக இருக்கிறது அல்லவா? அதைப் போலவே எல்லா உலகங்களுக்கும் இறைவனே முதல்வகை விளங்குகிருன்’ என்று சொல்கிருர்.

அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு.

தெரிந்ததைக் கொண்டு தெரியாததை விளக்க வேண் டும். கல்வி கற்கப் புகுந்தவுடனே யாவரும் அ என்ற எழுத்தைத் தெரிந்து கொள்வார்கள். அதிலிருந்து எழுத்து, சொல் முதலிய யாவும் தொடங்குகின்றன. அவ்வாறே எல்லாப் பிரபஞ்சங்களும் இறைவனிடத்தி லிருந்து தொடங்குகின்றன.

இந்தக் கருத்தைச் சொல்ல வந்தவர், 'கடவுள் எல்லா உலகங்களுக்கும் முதல்வன்’ என்று சொல்லி யிருக்கலாம். “உலகம் கடவுளே முதலாக உடையது” என்று வேறு உருவில் சொல்கிருர். உலகு என்பதை எழுவாயாக வைத்து வாக்கியத்தை அமைக்கிருர். படிச்கிறவர்களுக்கு, கடவுளேப்பற்றிச் சொல்கிறவர் கடவுளே எழுவாயாக வைக்காமல் உலகின் தன்மை யைச் சொல்பவரைப்போல உலகு என்பதை எழுவாயாக்கி யிருக்கிருரே என்று தோன்றக்கூடும். அந்த ஐயத்தைப் பரிமேலழகர் போக்குகிருர். தெரிந்ததைக் கொண்டு தெரியாதவற்றைத் தெரிவிப்பது மரபாதலால், தெரிந்த உலகத்தைக் கொண்டு தெரியாத கடவுளைப் பற்றிச் சொல்கிருர் என்று தெரிவிக்கிருர். காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூறவேண்டு தலின், 'ஆதிபகவன் முதற்றே உலகு’ என உலகின் மேல் வைத்துக் கூறினர். கூறினரேனும் உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க’ என்று நுட்பம் உணர்ந்து எழுதினர். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/33&oldid=553243" இலிருந்து மீள்விக்கப்பட்டது