பக்கம்:கற்பக மலர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்த பயன் . . . . ஒ5

"புவம்வளி கனல்புனல் புவிகலே

உரைமறை திரிகுணம் அமர்நெறி திவம்மலி தருசுரர் முதலியர்

திகழ்தரும் உயிரவை யவைதம் பவம்மலி தொழிலது கினேவொடு

பதுமகன் மலரது மருவிய சிவனது சிவபுரம் கினேயவர்

செழுநில னினில்கிலே பெறுவரே'

என்பது அப்பாடல்.

'வான், காற்று, தீ, பூமியாகிய பஞ்ச பூதங்களின் நிலே, பல கலைகள், பலவற்றைச் சொல்லும் வேதம், மூன்று குணம் அமைந்த வழி, ஒளியுடைய தேவர் முதலியோரும் வேறு வகை உயிருமாகத் தாம் தோன்றும் பிறப்பாகிய தொழில் ஆகிய இவற்றின் கினேவோடு, இந்தத் துன்பத்தினின்றும் நீங்கும் பொருட்டு இதய கமலமலரில் பொருந்திய சிவபெருமானுடைய சிவபுரத்தைத் தியானிப்பவர், இன்பச் செழுமையை யுடையதாகிய வீட்டுலகத்தில் கிலேயாக இருக்கப்பெறுவர் என்ற பொருளுடையது இப்பாடல். மலர்மிசை ஏகினன்' என்று வள்ளுவர் கூறியதுபோல, பதுமகன் மலரது மருவிய சிவன்’ என்ருர். அவர், நிலமிசை என்றதை, 'செழுகிலன்' என்ருர் நீடுவாழ்வார்’ என்பதை விளக்குவதுபோல, கிலே பெறுவரே என்று முடித்தார்.

இறைவனுடைய திருவடிப்பற்றை உடையவர் ஏனே நிலங்களில் பிறந்து இறந்து வாழும் வாழ்க்கை மாறி, உயர்ந்த நிலம் என்று சொல்லப் பெறும் வீட்டுலக வாழ்வைப் பெறுவர் என்பதையே திருவள்ளுவரும் சொன்னர்; ஞானசம்பந்தரும் சொன்னர். இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/44&oldid=553255" இலிருந்து மீள்விக்கப்பட்டது