பக்கம்:கற்பக மலர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கற்பக் மலர்

இந்த உலகத்தில் நெடுநாள் வாழ்வார் என்று பொருள் கொள்ளும்படி இருக்கிறது. அது. ஆயினும், 'நிலத்தின் மேலுள்ள உலகம் என்று நிலமிசை என்பதற்குப் பொருள் கொண்டார் பரிமேலழகர்; 'எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்’ என்று எழுதுகிருர். இவ்வுலகில் கெடிது வாழ்வதென்பது இயற்கை அன்று. - -

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு (336)

என்று வள்ளுவரே கூறியிருக்கிருர். ஆதலால் நிலமிசை என்பதற்கு எல்லா உலகிற்கும் மேலானது என்று பொருள் கொள்வதே பொருத்தம். வரன் என்னும் வைப்பு’ (24) என்றும், வானேர்க்குயர்ந்த உலகம்’ (346) என்றும் வீட்டைக் குறிப்பது வள்ளுவர் வழக்கம். அவற்றை நோக்கியே இங்கும் வீடு என்று பொருள் உரைத்தார் உரையாசிரியர்.

- இரண்டாவது குறளில் கற்றதற்குப் பயன் இறைவன் அடிதொழுதல் என்று சொன்னவர், அதற்குப் பின் மூன்ருவது குறளில் அடி தொழுதலுக்குப் பயன் இன்ன தென்று சொல்கிருர்; அடிசேர்ந்தார் நிலங்களுக்கு மிசையான இடத்தில் நீடுவாழ்வார்’ என்ருர். நீடுவாழ்தல் என்பது வீட்டுலகில்தான் நிகழ முடியும். மற்ற எந்த உலகமானலும் வாழ்க்கை தொடர்ந்து கிகழாது.

இந்தக் குறளேத் திருவுள்ளத்தில் வைத்துப் பாடினது போல ஒரு திருப்பாட்டைத் திருஞான சம்பந்தர் அருளியிருக்கிருர். சிவபுரம் என்னும் திருத் தலத்துத் தேவாரம் அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/43&oldid=553254" இலிருந்து மீள்விக்கப்பட்டது