பக்கம்:கற்பக மலர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்த பயன் 33

யன்று நடராசப் பெருமான் திருவீதியில் எழுந்தருளு கிருர். அதை ஒரு வைணவக் குடும்பத்துப் பையன் பார்த்து, தன் நண்பனுகிய சைவப்பிள்ளேக்குச் சொல்லும் போது, 'உங்கள் பெருமாள் எழுந்தருளுகிருர்’ என்று சொல்வான். உங்கள் என்ற சொல்லால் வேறுபடுத்தி குலும், அவன் வழக்கமாகச் சொல்லும் பெருமாள் என்னும் சொல் அவனே அறியாமலே பேச்சிடையே வந்துவிடுகிறது. அந்த முறையில், திருவள்ளுவர் பிறப்பால் சைனராக இருப்பதனலோ, சைனர்களிடையே மிகுதியாகப் பழகியதனுலோ இந்தத் தொடரைப் பயன் படுத்தினர் என்று தோன்றுகிறது. ஆயினும், அதற்கு எல்லாச் சமயத்துக் கடவுளருக்கும் ஏற்ற வகையில் பொருள் கொள்வதே பொருத்தமாகும். அதனுல்தான், அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் கினைந்த வடிவோடு விரைந்து சேறலின் ஏகினன் என இறந்த காலத்தால் கூறினர்' என்று பரிமேலழகர் விசேட உரையில் எழுதினர்.

இதயகமலத்தில் எழுந்தருள்பவன் இறைவன் என்பது எல்லாச் சமயத்தினருக்கும் உடம்பாடான கருத்து. 'மலர்மிசை எழுதரு பொருள்' (சிவபுரம், 5) என்றும், 'ஞானம், புகலுடையோர் தம் உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்' (திருவீழி மிழலை, 6) என்றும் சம்பந்தர் பாடுகிருர்.

இவ்வாறு உள்ளக் கமலத்துறையும் இறைவனைத் தியானித்துத் திருவடி பற்றினவர்கள், நிலமிசை நீடுவாழ்வார்’ என்பார் வள்ளுவர்.

மலர்மிசை ஏகினன் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/42&oldid=553253" இலிருந்து மீள்விக்கப்பட்டது