பக்கம்:கற்பக மலர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கற்பக மலர்

கல்வி முடிவையும் சொல்லிவிட்டார். இந்த இரண்டு குறட்பாக்களேயும் படித்தாலே கல்வியின் முதலும் முடிவும் தெரிந்துவிடும். பள்ளிக்கூடத்துக்குள் புகும் பையனுக்குச் சொல்லும் முதலுபதேசத்தைப் போல முதற் குறளும், பட்டமெல்லாம் பெற்று வெளிவரும் மாணவனுக்குச் சொல்லும் பட்டமளிப்பு விழாச் சொற் பொழிவைப் போல இரண்டாவது குறளும் இருக்கின்றன.

அடுத்தபடி இறைவன் திருவடிப்பற்றை உடையவர்கள் என்றும் மாருத பேரின்ப கிலேயை அடைவார்கள் என்பதைச் சொல்லுகிருர். அப்படிச் சொல்லும்போது இறைவனே மலர்மிசை ஏகினன்' என்ற தொடரால் குறிக்கிருர், மலர்மிசை ஏகினன் என்பது அருகக் கடவுளேக் குறிப்பவர்கள் சொல்லும் தொடர். இதைப் பரிமேலழகரே, இதனைப் பூமேல் நடந்தான் என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர்' என்று குறித்திருக்கிருர், பொதுவான நூலைச் சொல்ல வந்த திருவள்ளுவர் ஒரு கடவுளேக் குறிப்பிட்டுச் சொன்னர் என்று கொள்வது பொருத்தம் அன்று. 'ஆயின், அவர் அருகக் கடவுளுக்கே பெரும்பாலும் கூறும் இத் தொடரை ஆளாமல் பொதுவகையில் உள்ள தொடர்களைச் சொல்லலாமே!’ என்ற கேள்வி எழலாம்.

திருவள்ளுவர் எல்லாச் சமயத்துக்கும் பொதுவான நூலே இயற்றினர் என்பது உண்மை. ஆனல் அவர் பிறப்பினல் ஏதேனும் ஒரு சமயத்தைச் சார்ந்தவராகவே இருந்திருக்க வேண்டும். பொதுவான நூல் செய்தாலும் பழக்கத்தினால் தம்முடைய வகையினர் பெருக வழங்கும் சொற்களை ஆளும் கிலே வந்துவிடும். திருவாதிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/41&oldid=553252" இலிருந்து மீள்விக்கப்பட்டது