பக்கம்:கற்பக மலர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிந்த பயன் - - 3 #

"பெற்றிகொள் பிறைநுத

லீர் உமைப் பேணுதல் கற்றறி வோர்கள்தம் கடனே'

(தேவாரம். திருநெல்வெண்ணெய்.)

என்று திருஞானசம்பந்தப் பெருமான் பாடினர். நம்மாழ்வாரோ,

'கண்டும் தெளிந்தும் கற்ருர்

கண்ணற் காளன்றி பாவரோ' - (திருவாய்மொழி, 7. 5; 7)

என்று அருளினர்.

சேக்கிழார், பொய்யடிமையில்லாத புலவர் என்ற

தொகையடியார்களின் இயல்பை ஒரு பாட்டில் தெளிவாக எடுத்துரைக்கிருர், பொய்தீர் ஒழுக்க நெறியில் கிற்கும் அவர்கள், செவ்விய நூல் பலவற்றையும் ஆய்ந்தறிந்து பெற்ற மெய்யுணர்வின் பயன் இதுதானென்று சிவ பெருமானுடைய மலரடிக்கே ஆளானர்களாம்.

"செய்யுள்கிகழ் சொற்றெளிவும்

செவ்வியநூல் பலநோக்கும்

மெய்யுணர்வின் பயன்.இதுவே

எனத்துணிந்து விளங்கிஒளிர்

மையணியும் கண்டத்தான்

மலரடிக்கே ஆளாளுர்

பொய்யடிமை இல்லாத

புலவரெனப் புகழ்மிக்கார்’

- (பெரிய புராணம்) என்பது அவர் கூறும் பாட்டு.

கல்வியின் தொடக்கமாகிய அகரத்தை உவமையாக்கி

ಛಹಿ குறளைத் தொடங்கிய வள்ளுவர் அடுத்த குறளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/40&oldid=553251" இலிருந்து மீள்விக்கப்பட்டது