பக்கம்:கற்பக மலர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛莎 கற்பக மலர்

இறைவன் அடி சேர்ந்தவர் பிறவியென்னும் கடலே நீந்துவர்; சேராதவர் அதில் ஆழ்வர்.

மனிதனுகப் பிறந்தவனுக்கும் விலங்குக்கும் வேறு பாடு கல்வியினல் வருவது. கல்வி இல்லாதவன் மனித உருவத் தோற்றம் பெற்றிருந்தாலும் அவன் விலங்குக்கு ஒப்பானவனே. -

விலங்கொடு மக்கள் அனையர், இலங்குநூல் கற்ருரோ டேனை யவர் - (410)

என்பதில் இக்கருத்தைக் காணலாம். மனிதனே மனித னக்கும் கல்வி, அறிவை விரிவாக்குகிறது. அறிவு விரிந்தவன் இறைவன் திருவடியைத் தொழுது பொய்தீர் ஒழுக்க நெறி நின்று பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்கிருன். கல்வியிலே தொடங்கும் முயற்சி இறுதிப் பயனகிய பிறவாமையிலே முடியும். அதல்ைதான், .

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுபவர் மற்றீண்டு வாரா நெறி . (356) - என்று மெய்யுணர்தல்” என்னும் அதிகாரத்தில்

கூறினர். -

இவற்றையெல்லாம் நினேந்தே இரண்டாவது குறளில், 'வாலறிவன் நற்ருள் தொழாஅர் எனின் என்பதிலுள்ள நற்ருள் என்பதன் பொருளே விரிக்க வந்த பரிமேலழகர், பிறவிப் பிணிக்கு மருந்தாகலின் நற்ருள் என்ருர் என்று எழுதினர். - -

இறைவனுக்கு அன்பர் ஆகும் நெறியில் செல்வதே கல்வியின் பயன் என்று இந்நாட்டினர் கொண்டனர். இந்தக் கருத்தை இறைவன் அருள்பெற்று உயர்ந்த பெரியவர்களும் சொல்லியிருக்கின்றனர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/39&oldid=553250" இலிருந்து மீள்விக்கப்பட்டது