பக்கம்:கற்பக மலர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் சேர் புகழ் 49.

கடவுள் வாழ்த்தில் மன மொழி மெய்களால் இறை வனே வழிபட வேண்டுமென்று வள்ளுவர் சொன்னதைப் பார்த்தோம். மொழி வழிபாட்டை வற்புறுத்துவது,

இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)

என்னும் குறள். -

"மயக்கத்தைச் சேரும் இருவகை வினைகளும், இறைவ னது உண்மையான புகழை விரும்பினவர்களிடம் அடையா’ என்பது இதன் பொருள். கல்வினே, தீவினையாகிய இரண்டுமே பிறப்புக்குக் காரணமானவை. தீவினை இரும்பு விலங்கால்ை, நல்வினை பொன்விலங்கு போன்றது. இரண்டும் விலங்குகளே. இரண்டு வினைகளும் அற்ருல்தான் முத்திப் பேறு கிடைக்கும். ஆதலின், 'இருள் சேர் இருவினே' என்ருர். அவை சேராவிடின் ஞானம் உண்டாகும். அதனுல் இறைவன் திருவருள் அநுபவம் கிட்டும். -

இந்த கிலேயைப் பெறும் வழிகளில் ஒன்று, இறைவ னுடைய பொருள்சேர் புகழை விரும்பிக் கூறுதல். புரிதல் - விரும்புதல்; இங்கே விரும்பிக் கூறுதல்.

வள்ளுவர் இறைவன் புகழை, பொருள்சேர் புகழ் என்ருர். இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழ்' என்று பரிமேலழர் உரை வகுத்தார். பொருள் என்பது உண்மையைக் குறிக்கும் சொல்லாக இங்கே நின்றது. சொல்லுக்குரிய அர்த்தத்தையும் பொருள் என்று கூறலாம். பேசும் சொல்லுக்குரிய பொருள் எதுவோ, அந்தப் பொருள் நாம் சொல்லும் இடத்தில் நன்ருகப் பொருந்த வேண்டும். அப்போதுதான் அது பொருள் பெற்ற சொல் ஆகும், கண் இல்லாதவனேச் செந்தாமரைக் கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/58&oldid=553269" இலிருந்து மீள்விக்கப்பட்டது