பக்கம்:கற்பக மலர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

bo *քա» மலர்

என்று சொல்கிருேம். செந்தாமரைக் கண்ணன் என்ற தொடர், பொருள் இல்லாதது அன்று; அதற்குப்பொருள் உண்டு. ஆனல் அந்தப் பொருளேயும் குருடனுடைய இயல்பையும் வைத்துப் பார்த்தால் பொருந்துவதில்லை. அப்போது அது பொருளுடைய தொடரானலும், பொருள் இல்லாத் தொடர் ஆகிவிடுகிறது.

நாம் எவ்வளவோ பேரைப் புகழ்கிருேம். அந்தப் புகழை அவர்களும் ஏற்றுக்கொள்கிருர்கள். அது அவர் களுக்குப் பொருந்துவதாக இருந்தால் அது பொருளுடைய புகழாகும். இல்லையானல் அது பொருள் இல்லாப் புகழ் ஆகிவிடும். ஈகை, வீரம், செயற்கருஞ் செயல் செய்யும் ஆற்றல் முதலியவற்றை உடையவர்களே நாம் புகழ்ந்து பாராட்டுகிருேம். புகழ் பல வகையாளுலும் ஈகையால் விளேயும் புகழே சிறந்தது.

உரைப்பார் உரைப்பவை

எல்லாம் இரப்பார்க் கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் - (232) என்பது குறள். ஈவாரைக் கொண்டாடுவது உலக மக்க ளின் இயல்பு. -

ஈகையென்னும் இயல்பு யாவரிடத்தும் இருப்பதில்லை. ஈகைக்குரிய பொருள் இருந்தும் ஈயாமல் உள்ளவர் பலர். ஈவதற்குரிய மனம் இருந்தும் பொருளின்மையால் ஈயா தார் பலர். பணமும் மனமும் இருந்தும் ஈய வகை யில்லாமல் திண்டாடுவோர்களும் இருக்கின்றனர். எல்லாப் பொருளேயும் படைத்தவன் இறைவன். அவன் மக்களைக் கருவியாகக் கொண்டு, பெறுவோருக்குப் பொருள் கிடைக்கச் செய்கிருன். இரப்பவர்க் கீய வைத்தார்’ என்பது அப்பர்தேவாரம், - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/59&oldid=553270" இலிருந்து மீள்விக்கப்பட்டது