பக்கம்:கற்பக மலர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் சேர் புகழ் 51.

ஒரு பொருளே ஒருவர் கொடுத்தால் கொடுத்தவரை நன்றியுடன் புகழ்வது முறை என்ற அறிவு நமக்கு இருக்கிறது. ஆனல் கொடுத்தவரை இயக்கிக் கொடுக்க வைத்தவனே மறந்து விடுகிருேம். நெடுந் தூரத்திலுள்ள ஊரிலிருக்கும் நண்பன் ஒருவன் தன் தோழனுடைய வறிய கிலையை அறிந்து ஐம்பது ரூபாய் தபால் மூலம் அனுப்பு கிருன். அந்த மணியார்டரைத் தபால் சேவகன் கொணர்ந்து கொடுக்கிருன். பணத்தை எண்ணி அவன் கொடுக்கி, வறியவன் பெற்றுக்கொள்கிருன். கண் முன்னே பணத்தைத் தருகிறவன் தபால் சேவகன்தான்; இது பிரத்தியட்சம். அவனுக்கு நன்றி கூறுகிருன் வறியவன். ஆல்ை பணம் பெற்றவன் அறிவுடையவனதலால், பணத்தை நேரிலே கொடுத்தவன் வாயிலாக உதவி புரிந்தவன், அதாவது அதனை அனுப்பியவன், தன் நண்பன் என்பதை உணர்கிருன். அவன் நேரே இருந்து பணத்தைக் கொடுக்காவிட்டாலும், மறைவிலிருந்து அனுப்பியதல்ை தான் பணம் தன்னை அடைந்தது என்ற உண்மையை அவன் ஊகித்து உணர்கிருன். தாமதம் செய்யாமல் பணத்தைக் கொணர்ந்து கொடுத்த தபால்காரனுக்கு நன்றி தெரிவித்தவன், தன்னுடைய உள்ளத்து உணர்ச் சியை யெல்லாம் கொட்டிப் புகழ்ந்து ஒரு நெடுங்கடிதத் தைத் தன் நண்பனுக்கு எழுதுவான் அல்லவா? அப்படி எழுதினுல்தானே அவனே உண்மையாக நன்றியறி வுடையவன் என்று சொல்லலாம்? தபால்காரனிடம் நன்றி கூறின அளவிலே அவனுடைய கடமை தீர்ந்துவிட்ட தாகுமா? ஒருகால் தபால்காரனுக்கு நன்றி தெரிவிக்காமல் போனலும், பணம் அனுப்பிய நண்பனுக்கு நன்றி யறிவு காட்டும் கடிதத்தை எழுதாமல் இருப்பது மனிதத் தன்மைக்கே இழுக்கானது. அவனுக்கு உய்வே இல்லை.

இவ்வாறே, உலகில் நமக்கு உபகாரம் செய்கிறவர் களைக் கருவியாக்கி, அந்த ஈகையை நிகழ்த்துவதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/60&oldid=553272" இலிருந்து மீள்விக்கப்பட்டது