பக்கம்:கற்பக மலர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய் தீர் நெறி 5学

கிறது; அதை நீரென்றே நம்புகிருேம். அது காணல் என்று தெரிந்தவுடன் அது மறைந்து போவதில்லே. நீராகத் தோன்றும் தோற்றம் அப்படியே இருக்கிறது; ஆனால் அதை நீரென்று நாம் நம்புவதில்லை. நாடகத்தில் நடிப்ப வன் தான் ஏற்ற பாத்திரத்தைப் போலவே கடிக்கும் போது, நாம் அந்தக் கோலத்தில் ஈடுபடுகிருேம்; ஆல்ை அவன் அந்தப் பாத்திரமே யல்லன் என்ற உணர்வோடு ஈடுபடுகிருேம். கானலென்று தெரிந்த பிறகும் அதன்கண் நீரைப்போன்ற தோற்றத்தைக் காணுகிருேம்; அந்த கிலே நாடகத்தின் காட்சியைப் போன்றது.

மூன்ருவது வகையான பொய், உண்மையிலே இல்லா தது. இவ்வகைப் பொய்க்கு மலடி மகன், ஆகாயத்தாமரை, குதிரைக் கொம்பு என்பனவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். -

- நெடுங்காலம் கிலேயாததை கிலேக்குமென்று நம்பி வாழ்வதும், ஒன்றை வேருேன்ருக எண்ணி வாழ்வதும், இல்லாததை எண்ணி வாழ்வதுமாகிய மூன்று வாழ்வும் பொய்யைப் போற்றும் வாழ்வென்றே சொல்லி விடலாம்.

இந்த மூன்று வகைப் பொய்யினிடையே வாழ்க் தாலும் மெய்யுணர்வு பெற்றவன் உண்மையை உணர்ந்து மெய்ந்நெறியிலே நடப்பான். கிலேயாத பொருளோடு பழகும்போது அது கிலேயாததென்ற கினைவோடே செயல் செய்வான். இளமை கிலேயாது என்பதை உணர்ந்தால், அது இருப்பதற்குள் நல்ல செயல்களேச் செய்வான். உடம்பு கிலேயாது என் பதை உணர்ந்தால், அது உள்ளவரைக்கும் நல்ல

பயனே அடைவதற்குரிய வழியில் அதைப் பயன்படுத்து

கற் பக-5 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/66&oldid=553278" இலிருந்து மீள்விக்கப்பட்டது