பக்கம்:கற்பக மலர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய் தீர் நெறி

& & & e - -

உலகம் பொய்; இதை நம்பக் கூடாது.”

'கானல்நீர் பொய்; அதை நம்பி ஏமாந்து போகக் கூடாது.” -

'மலடி மகன் என்பது பொய்; மலடி என்ற பெயரே அவளுக்குக் குழந்தை இல்லே என்பதைக் காட்ட G#]&y&yu ifr?**

இப்படிப் பேசுகிற பேச்சில் மூன்று பொய்கள் வருகின்றன. மூன்றும் பொய் என்று சொன்னுலும் வெவ்வேறு வகையானவை. உலகம் நமக்கு மெய் யாகவே தோன்றுகிறது; அதை எப்படிப் பொய் யென்று சொல்லுவது? ஆனாலும் அதை மாயம் என்று சொல்வோர் இருக்கிருர்கள். அது கிலேயா மையை உடையது என்ற கருத்தில்தான் பொய் என்று சொல்கிருர்கள். மன்னப் பொருளேப் பொய் என்று சொல்வது மரபு. மன்னுதல் என்பதற்கு இருத்தல், கிலேயாக இருத்தல் என்ற இரு பொரு ளும் உண்டு. கிலேயாமையையுடைய பொருளே மித்யை என்று வடமொழியாளர் கூறுவர். அது ஒரு வகைப் பொய். உடல் பொய் என்பதும் இத்த கையதே. -

கானல்நீர் என்பது மற்ருெரு வகைப் பொய். கானல் என்று தெரியாதபோது அது ரோகத் தோற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/65&oldid=553277" இலிருந்து மீள்விக்கப்பட்டது