பக்கம்:கற்பக மலர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய் தீர் நெறி 81

நிலையாதவற்ருேடு வாழும் வாழ்வில் பொய்ந் நெறி நீங்கி, மெய்ப்பொருளுணர்வுடன் வாழும் மெய்ந் நெறியில் செல்லும் முறை இது.

இனி, வெறும் தோற்றமாக உள்ளவற்றை நாடகம் பார்ப்பவனைப் போலச் சாட்சியாக நின்று பார்த்து வாழ் வது, இரண்டாவது வகைப் பொய்யினின்றும் நீங்கி ஒழுகும் ஒழுக்கமாகும். இல்லாத பொய்யினின்றும் நீங்குவது மிக எளிது. வெறும் கற்பனேயான அவற்றை எண்ணுமல் இருப்பதே அவற்றினின்றும் நீங்கும் வழி.

இவ்வாறு பொய்ந்நெறி நீங்கிப் பொய்யொழிந்து வாழும் ஒழுக்கம் இறைவன் திருவருளால் உண்டாக வேண்டும். திருவாசகத்தில் மணிவாசகர் பல இடங் களில் பொய் தீர்ந்து மெய் தேர்ந்து வாழும் நெறியைச் சொல்கிரு.ர்.

  • பொய்யா யினவெல்லாம்

போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி

மிளிர்கின்ற மெய்ச்சுடரே' போற்றிப் புகழ்ந்திருந்து

பொய்கெட்டு மெய்யானுர்’ 'பொய்ம்மை தீர்ந்து மெய்ம்மையே

ஆண்டுகொண்டு’

என்பனவற்றைக் காண்க.

இறைவன் அருள்வழி நிற்பவர்கள் பொய் தீர்ந்த நெறியில் நிற்பார்கள். அவர்களுக்கு கிலேயற்ற இந்த வாழ்க்கையின் இறுதியில் கிலேயான வாழ்க்கை, கிடைக்கும். இதைத் திருவள்ளுவர் ஒரு குறளில் சொல்லுகிருர்: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/70&oldid=553282" இலிருந்து மீள்விக்கப்பட்டது