பக்கம்:கற்பக மலர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

伊2 கற்பக மலர்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்ஒழுக்க நெறிநின்ருர் நீடுவாழ் வார்.

பொய்தீர் ஒழுக்க நெறி என்ற ஒன்றை அவர் சொல்கிருர், சமயங்களே மார்க்கம் என்று சொல்வது ஒரு மரபு. மார்க்கம் என்பதும் நெறி என்பதும் ஒரே பொருள் உடையன.

நாம் இப்போது செல்லும் நெறி மேலே சொன்ன மூன்று வகைப் பொய்யோடும் கலந்து வாழும் ஒழுக்க மாக இருக்கிறது. இது தீர்ந்து மெய்யொழுக்க நெறியில் நாம் வாழவேண்டும். பொய்ந்நெறி என்பது கிலேயாத வற்றையும், தோற்றத்தையும், இல்லாதவற்றையும் அவாவி இறைவனே மறந்து வாழும் வகை. அதனால் மேலும் மேலும் பிறப்பே வருகிறது.

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளான் ஆம் மாணுப் பிறப்பு (351)

என்பது குறள். பொய்யில் ஈடுபடுவதே மருள் அல்லது மயக்கம்; அதனேயே மாயை என்றும் சொல்வார்கள்.

"மெய்ம்மை அன்பருன் மெய்ம்மை மேவினர்

பொய்யி லங்கெனப் புகுத விட்டுநீ போவ தோசொலாப் பொருத்த மாவதே' என்று, இந்த அவல வாழ்வை கினைந்து இரங்கிக் கூறுகிருர் மணிவாசகர்.

பொறியின் வழியே சென்று அவாவைப் பெருக்கித் தடுமாறுகின்றவனுக்கு அவற்றின் தொடர்பே இல்லா தவனல்தான் உய்தி கிடைக்கும். பொய்ந்நெறி வாழ்க்கை மாறும்படி அப்பெருமான் ஒருவன் தான் அருள் செய்ய முடியும். அதல்ை பொய்தீர் ஒழுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/71&oldid=553283" இலிருந்து மீள்விக்கப்பட்டது