பக்கம்:கற்பக மலர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கற்பக மலர்

அரசனே நாடிப் பெரியவர் சென்ருர்; அவன் அரண் மனேயுட் புகுந்தார். அரசன் எங்கே என்று கேட்டபோது பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்னர்கள். பெரிய வர் அரசன் இருக்குமிடம் சென்று ஒரு மூலையில் கின்று கவனித்தார். அப்பொழுதுதான் அவன் இறைவனிடம் தன் வேண்டுகோளேச் சொல்லிக்கொண்டிருந்தான்; "எல்லாம் வல்ல பெருமானே, எளியேன் ஏழை; இந்நாட்டைக் காக்கும் பொறுப்பை எனக்கு வழங்கி யிருக்கிருய். அதற்கு ஏற்ற செல்வத்தையும் ஆற்றலேயும் எனக்கு அருள வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டான். -

இது பெரியவருடைய காதில் விழுந்தது. அவருக்குப் பெரு வியப்பு உண்டாயிற்று. அட! இது என்ன ஆச்சரியம்! நாம் ஏழை, இவனிடம் பொருள் வாங்கலாம் என்று வந்தால், இவனும் தன்னே ஏழை என்று சொல்லி வேறு ஒருவரிடம் இரக்கிருனே! அவரிடம் இவன் இரந்து நமக்குத் தருவதைப் பெருமல், நாமே அந்தப் பரம்பொருளே நேரே அணுகி வேண்டியதைப் பெறலாமே? என்ற எண்ணம் தோன்றவே, அவர் பேசாமல் காட்டை நோக்கி நடந்தார்.

இவ்வாறு ஒரு கதையை இராமகிருஷ்ண பரம ஹம்ஸர் சொல்லியிருக்கிருர். நமக்குக் குறை இருக் கிறது என்று எண்ணி வேறு ஒருவரை நாடினல், அவரும் குறையுள்ளவராகவே இருக்கிருர். இதுதான் உலக இயல்பு. இந்த உண்மையையே அந்தக் கதை புலப் படுத்துகிறது.

நூறு ரூபாய் சம்பளம் உடையவனுக்குப் பத்து ரூபாய் பற்ருக்குறை உண்டானுல் அவன் ஆயிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/75&oldid=553288" இலிருந்து மீள்விக்கப்பட்டது