பக்கம்:கற்பக மலர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை இல்லான் 67.

ரூபாய் சம்பளம் உடையவனே அணுகிக் கேட்கிருன். ஆயிர ரூபாய் சம்பளக்காரன் பத்து ரூபாய் தந்து விடுவான்; ஆனால் அவனே தன்னேவிடப் பணக்காரனிடம் சென்று தன் பற்ருக்குறையாகிய நூறு ரூபாயைக் கடனுகக் கேட்கிருன். இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ் வேறு வகையில் வெவ்வேறு அளவில் குறை இருந்து வருகிறது. அந்தக் குறையை நீக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. கவலே கொண்டவர்க ளாகிருர்கள்.

பற்ருக்குறையினல் மட்டுமா கவலை உண்டாகிறது? எத்தனையோ விதங்களில் மனிதன் கவலைக்கு ஆளாகிருன். அந்தக் கவலே நீங்க வேண்டுமானுல் அவனுடைய குறைகள் தீரவேண்டும். குறை உடையவன் ஒருவல்ை பிற னுடைய குறையைத் தீர்க்க முடியாது. ஏதோ ஒரு சமயத்தில் ஒரளவில் தீர்க்கலாம். மறுபடி குறை உண் டாகும். குறைவே இல்லாத ஒருவன் பிறனுடைய குறையை நீக்கப் புகுந்தால் முற்றும் நீங்கும். அத்தகைய வன் இறைவன் ஒருவன்தான்.

'குறைவிலா நிறைவே கோதிலா அமுதே

ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே'

என்பது திருவாசகம்.

இறைவன் பரிபூரணன்; நிறைவுடையவன்; வேண்டி யவற்றைக் குறைவின்றித் தருபவன். அவனைப் போன்ற வள்ளல் உலகில் யாரும் இருக்க இயலாது. எவ்வளவு சிறந்த வள்ளலாக இருந்தாலும் எப்போதும் எல்லாருக்கும் எல்லாவ்ற்றையும் கொடுப்பதென்பது இயலாது. பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் ஒரு சேர அரசனுடைய வண் மையைப்பற்றி ஒரு புலவர் சொல்கிருர். அவன், "நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/76&oldid=553289" இலிருந்து மீள்விக்கப்பட்டது