பக்கம்:கற்பக மலர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கற்பக மலர்

இதைக் கொடுத்துவிட்டோமே, சிறிது குறைவாகக் கொடுத்திருக்கலாமே' என்று, கொடுத்ததற்காக இரங்க மாட்டாளும். அதைவிடப் பெரிய இயல்பு ஒன்று அவனிடம் உண்டு. இந்த இரவலனுக்கு நாம் கொடுத்தோம்; இது நல்ல காரியம்’ என்று மகிழமாட்டாம்ை. அதையும்விடப் பின்னும் சிறந்த பண்பு அவனிடம் ஒன்று இருந்ததாம். ஒருவன் அவனிடம் வந்து இரந்து பொருள் பெறுகிருன். காலேயில் பெற்றவன் மாலேயில் திரும்பி வருகிருன். அப்போது வள்ளல், காலையில்தானே வாங்கிய்ை? என்று சொல்வது இயல்பு. அப்படிச் சொன்னுல், அவ னளவில் அப்போது இல்லை என்று சொன்னதற்கு ஒப்பானதே அது. சேர மன்னன் அப்படிச் சொல்ல மாட்டானும், எத்தனே முறை வந்தாலும் வண்மையுடைய வகை, முன் வாங்கியதை எண்ணி மறுக்காதவனுக இருப் பானும். இந்த மூன்று பண்பையும் புலவர் சொல்லுகிருர்;

'ஈத்தது இரங்கான்: ஈத்தொறும் மகிழான்;

ஈத்தொறும் மாவள் வளியனே.”

இங்கே, ஈத்தொறும் மாவள்ளியனே' என்ற அடி தான் மிகச் சிறந்த வள்ளன்மையைக் காட்டுகிறது. அந்த வண்மைக்குக்கூட எல்லே. உண்டு.

கர்ணன் ஒரு நாளின் முற்பாதியில்தான் கொடை வழங்குவான் என்று சொல்வார்கள். எப்போதும் அள வின்றி வழங்கும் ஆற்றலே மக்களிடம் காணல் இயலாது; ஏனெனில் மக்கள் யாவரும் குறைந்த ஆற்றலுடைய வர்களே. -

இறைவனே வரம்பில்லாத ஆற்றலுடையவன். எல்லாப் பொருளேயும் உடையவன்; குறைவிலா நிறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/77&oldid=553290" இலிருந்து மீள்விக்கப்பட்டது