பக்கம்:கற்பக மலர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை இல்லான் 89

வுடையவன். அவனே கொடையில் யாவரினும் சிறந்த வகை இருக்க முடியும்.

இதை அருணகிரிநாதர் திருப்புகழில் சொல்கிரு.ர்.

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது

வேண்ட வெருதுதவு பெருமாளே!”

அடியவர்கள் தமக்கு இன்னது வேண்டுமென்று வேண்டுகிருர்கள். அடுத்தடுத்து வேண்டுகிருர்கள். ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொன்றை வேண்டு கிருர்கள். மடைப் பள்ளியிலே தண்ணிர்க்குழாய் இருந் தால், பாத்திரத்தில் பூரித்து வைக்கவேண்டிய அவசிய மின்றி வேண்டிய போதெல்லாம் குழாயைத் திருகித் தண்ணிர் பெறலாம். அதுபோல அடியவர்கள் தங்களுக்கு இவை வேண்டுமென்று வரையறையாக முன்கூட்டியே தொகுத்துச் சொல்லாமல், அவ்வப்போது வேண்டியதைக் கேட்டாலும் வழங்குவான் இறைவன். நச்சுகச்சென்று கேட்டால் எவ்வளவு பணக்காரனுக இருந்தாலும் சலிப் புண்டாகும் தன்னுடைய புதல்வனேயானுலும், 'முன்பே ஒருமிக்க வாங்கி வைத்துக்கொள்வதுதானே?’ என்று தான் சொல்லத் தோன்றும். இறைவனுே அப்படிச் சலித்துக்கொள்வ தில்லையாம். அடியார்கள் வேண்ட வேண்ட வெறுப்புருமல் வேண்டியவற்றைத் தருவானும். வேண்ட வெருது உதவு பெருமாளே! என்பதில் இவன் கேட்கிருனே என்ற வெறுப்பைக் குறிக்கவில்லை. ஒரேயடியாகக் கேட்டுத் தொலைக்காமல் கச்சுகச்சென்று கேட்டுப் பிராணனே வாங்குகிருனே! என்ற சலிப்பைத் தான் குறிக்கிருர், அடியார் வேண்டியபோதெல்லாம் அவர்களுக்கு வேண்டிய போகங்களேக் கொடுப்பான்; வேண்ட வேண்ட அலுப்புச் சலிப்பின்றிக் கொடுப்பான். அப்படிக் கொடுக்க உலகில் வேறு யாராலும் இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/78&oldid=553291" இலிருந்து மீள்விக்கப்பட்டது