பக்கம்:கற்பக மலர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவாழி அந்தணன் ን?

கம் வாழ்வில் உயிர்காடியாக இருப்பது அறம். அதித்துக்குப் புறம்பான முயற்சியில் பொருளே ஈட்டினுல் அது உறுதிப் பொருளாகாது. அப்படியே அறநெறியினின்றும் வழுவி இன்பம் துய்த்தால் அது நல்ல இன்பம் அன்று. ஆகவே அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றையும் அறம் என்றே சொல்லி விடலாம். பொருளிட்டுவதற்கும் இன்பம் துய்ப்பதற்கும் உரிய செயல்களல்லாதவை அறம் என்று தனியே பெயர் பெறும். - . . .

அறமல்லாத வழியிலும் பொருளிட்ட வழி உண்டு; திருடிப் பொருள் பெறுதலும், வலிய ஒறுத்துப் பொருள் பெறுதலும், வஞ்சித்துப் பெறுதலும் அறமல்லாத செய்கை களாம். அப்படியே பிறன் மனேவி, கன்னி, பொது மகளிர். ஆகியோரிடத்தில் இன்பம் பெறுதலும், தன் மனேவியால் முறையற்ற வழியில் இன்பம் பெறுதலும் அறம் அல்லாத செய்கைகளே.

அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் பலபல பிரிவுகளாக விரிந்தவை. பொருள் இன்பங்களுக்கு ஆதாரமாக உள்ள அறம் தூயது. இறைவனே அறவடிவினனுக இருக்கிருன் என்று பெரியோர் கூறுவர். - " -

அறு என்பதன் அடியாகப் பிறந்தது அறம் என்ற சொல். இன்னது செய்யவேண்டும் என்று வரையறுக்கப் பட்ட நெறியே அறம். இந்த வரையறை யாரால் ஏற் பட்டது? இறைவலுைம், அவனருள் பெற்ற பெரியோர் களாலும் அமைந்தது.

காலத்துக்குக் காலம் வேறுபடும் அறங்களும் இடத்துக்கு இடம் வேறுபடும் அறங்களும் மக்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்பக_மலர்.pdf/86&oldid=553299" இலிருந்து மீள்விக்கப்பட்டது